என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்துளை கிணறு மற்றும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் தேவராஜ் எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்த காட்சி.
திருப்பத்தூர் பகுதியில் குடிநீர், சாலை வசதி
- தேவராஜ் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே வீரபத்திரன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தேவராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனை ஒட்டி தேவராஜ் எம்.எல்.ஏ வேடியப்பன் வட்டம் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சாலை அமைக்க இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் .
பின்னர் அந்த பகுதிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் க்கு உத்தரவிட்டார்உடன் மாவட்ட துணைச் செயலாளர் அ.சம்பத்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல், இடைச் செயலாளர் பிரபு உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.






