search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road block"

    • இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    கடலூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை சீர் குைலப்பதை தடுக்க வேண்டும். இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் அருகே உள்ள மேல்பட்டாம் பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் மேல்பட்டாம்பாக்கம் இரட்டை ரோட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மேல்பட்டாம்பாக்கம் காமராஜர் சிலை அருகே கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர்.
    • அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு அளவீடு செய்யும் பணி செய்வதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அதிகாரிகள் எடுத்த அளவீடு சரியான முறையில் இல்லை எனக் கூறி அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, கல்வி செல்வன், கணேசன், ராஜி, நகர செயலாளர் திருமாறன், தமிழ் ஒளி, அம்பேத், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உட்பட 13 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின.
    • டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கொந்தாமூர் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு கருங்கல் ஜல்லி, கிரஷ்ஷர் பவுடர் போன்றவைகளை ஏற்றிச் செல்ல டிப்பர் லாரிகள் ஏராளமாக வந்து செல்லும். அவ்வாறு வரும் டிப்பர் லாரிகள் சாலை வழியாக சென்றால் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதாலும், அதிக நேரம் ஆகும் என்பதாலும், ஊருக்குள் உள்ள குறுக்கு வழிகளில் செல்லும். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்ததால், அப்பகுதி மக்கள் அந்த வழியில் டிப்பர் லாரிகள் செல்ல முடியாதவாறு மூடிவிட்டனர். இதை யடுத்து டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின. திண்டிவனத்தை சேர்ந்த வாலிபர் புதுவைக்கு சென்று நேற்று இரவு திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் கொந்தாமூர் மேம்பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது, எதிரில் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் அறிந்த கொந்தாமூர் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுவை - திண்டிவனம் சாலையில் திரண்டனர். கருங்கல் குவாரிக்கு செல்லும் லாரிகள், அதற்குரிய சாலையில் செல்ல வேண்டும். குறுக்கு வழியிலும், சாலையின் எதிர்புறத்தில் வருவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலை யில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை யேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் புதுவை - திண்டிவனம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • திருமாவளவன் பேனர் அகற்றியதால் வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் பல்ேவறு இடங்களில் திருமாவளவனின் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மட்டங்கால் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் தூக்கி சென்று விட்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை அக் கட்சியினர் பிளக்ஸ் பேனர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கட்சியினருக்கு பரவியது.

    உடனே அவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் மட்டங்கால் பேருந்து நிறுத்தம் அருகே மாநில துணைத்தலைவர் வீர விடுதலை வேந்தன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் காரர்கள், திருமாவளவன் பிளக்ஸ் பேனர் திட்டமிட்டு அகற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படுவது வாடிக்கையாக நிகழ்கிறது என குற்றஞ் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராஜ் பிளக்ஸ் பேனர் அகற்றியவர்கள் மீது உரிய நடவடிகை எடுகக்ப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • குடிநீர் வழங்க கோரி நடந்தது

    பவானி,

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரத நல்லூர் அடுத்த கூலிக்காரன் பாளையம், பொரட்டு க்காட்டூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் கிடைக்க வில்லை என கூறப்படு கிறது.

    இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் கூலிக்காரன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிராம ஊராட்சி மாரிமுத்து மற்றும் வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நட வடி க்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பாதாள சாக்கடையை சரி செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.



    பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதை படத்தில் காணலாம்.

     மதுரை

    மதுரையில் வணிக நிறு வனங்கள், ஒர்க் ஷாப்கள் நிரம்பிய மைய பகுதியாக சிம்மக்கல் உள்ளது. 50-வது வார்டு பகுதியான இங்கு மாவட்ட மைய நூலகமும் உள்ளது. இதன் அருகில் உள்ள அபிமன்னன் கிழக்கு மேற்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட தாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்த பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் செய்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென சிம்மக்கல் மெயின் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிக ளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் பெண்க ளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத் தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.


    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.

    இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

    இப்பள்ளிக்கு கொங்க ணாபுரம், வைகுந்தம், தாழையூர், வெள்ளையம் பாளையம், காளிப்பட்டி பிரிவு, இருகாலூர், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர்.

    தனியார் வாகனம்

    இவர்களுக்கு பஸ் வசதி இல்லாததால் தனியார் வாகனங்களில் மாதம் ரூ.2000 வரை கட்டணம் செலுத்தி தினமும் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 13-ம் எண் அரசு பஸ் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டாக காலை, மாலை வேளைகளில் பஸ் இயக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் வடுகப்பட்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மறியல்

    இதையடுத்து, தங்களுக்கு பஸ் வசதி அளிக்க வேண்டும் எனக் கேட்டு, பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணியளவில் வைகுந்தம் - வடுகப்பட்டி சாலையில், பாப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    மறியல் குறித்து தகவல் அறிந்து சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் வளர்மதி, திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சதாசிவம், சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, 13-ம் எண் கொண்ட பஸ்சை பள்ளி நேரத்தில் காலை, மாலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து, மாணவர்கள் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
    • 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிகளில் உணவு, குடி நீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர், மனுவை பெற்றுகொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதி மாணவ ,மாணவிகள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.

    • அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பகண்டை கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் முருகவேல். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் வழுதாவூர் சாலையில் தொராவி கிராமம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ம.க. உறுப்பினர் முருகவேலை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் துரைராஜ், மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்த ப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகின்றோம். விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததனர். அதன் பேரில் காலை 9 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு வி.சி.க.வினர் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக விழுப்புரம் வழுதாவூர் சாலையில் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன்.
    • பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. பத்தூதர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அமுதா (40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தி அசல் வட்டியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த நபர் பாண்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று கூலி வேலை செய்து வந்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அமுதா வெளியூர் சென்ற நேரத்தில் அந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொட ர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அமுதா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த நபர் ஊரில் பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    • 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
    • தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை ரெயிலடியில் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    • மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோ உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் தொடர் மின்தடையை கண்டித்து இன்று காலை பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்தடையை கண்டித்தும், அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×