search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியனூர் அருகே ஒரு வழிப்பாதையில் வந்த டிப்பர் லாரி மோதி வாலிபர் படுகாயம்: கிராம மக்கள் சாலைமறியல்
    X

    சாலைமறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கிளியனூர் அருகே ஒரு வழிப்பாதையில் வந்த டிப்பர் லாரி மோதி வாலிபர் படுகாயம்: கிராம மக்கள் சாலைமறியல்

    • டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின.
    • டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கொந்தாமூர் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு கருங்கல் ஜல்லி, கிரஷ்ஷர் பவுடர் போன்றவைகளை ஏற்றிச் செல்ல டிப்பர் லாரிகள் ஏராளமாக வந்து செல்லும். அவ்வாறு வரும் டிப்பர் லாரிகள் சாலை வழியாக சென்றால் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதாலும், அதிக நேரம் ஆகும் என்பதாலும், ஊருக்குள் உள்ள குறுக்கு வழிகளில் செல்லும். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்ததால், அப்பகுதி மக்கள் அந்த வழியில் டிப்பர் லாரிகள் செல்ல முடியாதவாறு மூடிவிட்டனர். இதை யடுத்து டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின. திண்டிவனத்தை சேர்ந்த வாலிபர் புதுவைக்கு சென்று நேற்று இரவு திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் கொந்தாமூர் மேம்பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது, எதிரில் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் அறிந்த கொந்தாமூர் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுவை - திண்டிவனம் சாலையில் திரண்டனர். கருங்கல் குவாரிக்கு செல்லும் லாரிகள், அதற்குரிய சாலையில் செல்ல வேண்டும். குறுக்கு வழியிலும், சாலையின் எதிர்புறத்தில் வருவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலை யில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை யேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் புதுவை - திண்டிவனம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×