search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "results"

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும். #SSLC #SSLCResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

    ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.



    தற்போது வெளியான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இதில் 93.3% மாணவர்களும் 97%  மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.7 அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். #SSLC #SSLCResult
    மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

    இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.



    மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

    மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

    விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    இந்த தேர்வு முடிவுகளை (www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். 
    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #Plus2Result #HSCResult #Plus2100%Pass
    சென்னை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.

    பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

    ஒட்டுமொத்தத்தில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,754. இதில் 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


     
    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு விவரங்களை http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #Plus2Result  #HSCResult #Plus2100%Pass
    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும். #KarnatakaAssemblyElection #Results
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

    தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.

    ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

    சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  #KarnatakaAssemblyElection #Results 
    நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. #ExamResult #PlusTwo #Result
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

    அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

    விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது.

    மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in ,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.  #ExamResult #PlusTwo #Result
    ×