என் மலர்

  நீங்கள் தேடியது "today"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
  • பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  ஈரோடு:

  இஸ்லாமியர்களின் முக்கிய மான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடை களை அணிந்து மசூதி களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  இதே போல் ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

  ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ரஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பெரிய அக்ர ஹாரம் தாவூதிய்யா மசூதி, காளைமாட்டு சிலை ஜாமியா மசூதி, காவேரி ரோடு ஜன்னத்பிர்தவ்ஸ் மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி,

  ஓடை ப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, கனிராவுத்தர்குளம் ஜாமியா மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

  அந்தியூர் பர்கூர் சாலை யில் உள்ள மஜித் தேனூர்பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீத் தலைமையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது

  இதில் சுன்னத் ஜமாத் செயலாளர் ஷனவாஸ், கமிட்டி உறுப்பினர் கதர் ஹைதர் கான் மற்றும் சுன்னத் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொணடனர். இந்த தொழுகையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்பின்பு பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

  கோபிசெட்டிபாளையம் முத்துசாமி வீதி ஈத்கா பள்ளிவாசல், நல்ல கவுண்டம்பாளையம், கலிங்கியம், சாமிநாதபுரம், கடத்தூர் உள்பட 13 இடங்களில் பக்தீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொரு வர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

  இதே போல் சத்திய மங்கலம் மணிக்கூண்டு பெரிய பள்ளி வாசல், வண்டி பேட்டை சின்ன பள்ளி வாசல், வடக்கு பேட்டை நேருநகர் உள்பட 8 பள்ளி வாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

  மேலும் தாளவாடி ஜாமிய மஜித் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஏழை களுக்கு குர்பானி வழங்க ப்பட்டது.

  இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், பவானி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் 91 மசூதிகளிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
  • மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  நெல்லை:

  தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் என 917 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

  மாநகராட்சி பகுதியில் 140 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 777 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல், 2-ம் தவனை தடுப்பூசிகள் போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து ஊசிபோட்டு சென்றனர்.

  நெல்லை மாவட்டத்தில் 2009 நிலையான தடுப்பூசி முகாம்கள், 135 தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 2,144 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் தடுப்பூசி போட்டு சென்றனர்.

  மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  மாநகர பகுதியில் சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வங்கிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதியத்திற்கு பின்பு வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டது.

  மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்று மாநகர பகுதியில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முறையான விசா இல்லாமல் தங்கியிருந்ததால் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட உக்ரைன் மாடல் அழகி இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். #UkrainianModel #UPModelRelease
  கோரக்பூர்:

  உக்ரைனைச் சேர்ந்த மாடல் அழகி தாரியா மோல்சா (வயது 20). இவர் முறையான விசா எதுவும் இன்றி நேபாளம் வழியாக எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த ஏப்ரல் 3-ம்தேதி கைது செய்தனர். அவரிடம் போலியான டிரைவிங் லைசென்ஸ் மட்டும் இருந்தது.

  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உளவு வேலை பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

  இதுபோன்ற காரணங்களால் அவரது ஜாமீன் மனுவை கோரக்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த வாரம் ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

  இந்நிலையில், தாரியாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை கோரக்பூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. கோர்ட் உத்தரவு கோரக்பூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் விடுதலை செய்யப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.  #UkrainianModel #UPModelRelease
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று தி.மு.க. நடத்திய மாதிரி சடடமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. #DMKSampleAssembly
  சென்னை:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்ள குளறுபடிகள் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தி.மு.க. சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.  அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். எம்எல்ஏ கருணாசும் பங்கேற்றார். திமுக கொறடா சக்கரபாணி அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்.

  கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. #DMKSampleAssembly
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
  புதுடெல்லி:

  மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

  விடைத்தாள்  திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். கூகுள் தளத்திலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.  மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பிறந்த தேதி, பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். #SSLC #ExamResult
  சென்னை:

  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.

  www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

  மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

  28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

  துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

  இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும். #KarnatakaAssemblyElection #Results
  பெங்களூரு:

  கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

  வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

  தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.

  ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

  தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

  சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  #KarnatakaAssemblyElection #Results 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கோடைமழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
  சென்னை:

  தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கோடைமழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

  கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் வழக்கமான அளவை விட கூடுதலாக பெய்தது. பொதுவாக கோடை மழையை பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்ப்பது வழக்கம்.

  தமிழகத்தில் கோடைமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

  தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறப்போகிறது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் தென்மேற்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு எந்தவித தாக்கமும் இருக்காது. கோடை மழை தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெய்யும்.

  தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் உள் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. இது முழுக்க முழுக்க கோடை மழை.

  இவ்வாறு வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

  நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

  பழனி 4 செ.மீ., குழித்துறை, உடுமலைப்பேட்டை தலா 3 செ.மீ., தோகைமலை, வால்பாறை, திருமங்கலம், கொடைக்கானல் தலா 2 செ.மீ., பொள்ளாச்சி, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தென்காசி, அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், சேரன்மகாதேவி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
  ×