சென்னிமலை முருகன் கோவிலில் இன்று 12 ேஜாடிகளுக்கு திருமணம்

சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது.இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று 12 ேஜாடிகளுக்கு திருமணம்
Published on

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.மலை மேல் அமைந்துள்ள இக் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.

இன்று கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

12 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து சுப்பிரமணி சாமியை தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.

திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com