என் மலர்

  நீங்கள் தேடியது "Vaccination Camp"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
  • அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

  வாணியம்பாடி:

  திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

  இம்முகாமை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.டி.ஆர். செந்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

  உடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
  • ஈரோடு மாவட்டத்தில்1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

  ஈரோடு, செப். 17-

  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

  அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை (ஞாயிற்று க்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

  அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

  12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுப்படுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

  இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
  • காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

  மதுரை

  மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மையங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

  அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

  மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் - (ஊரக பகுதிகளில் 107498 மாநகர பகுதிகளில் - 112758) உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேர் (ஊரக பகுதிகளில் 590374 மாநகர பகுதிகளில் -572733) உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
  • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

  கடலூர்:

  கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.
  • பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

  காங்கயம்:

  முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.

  முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற 18- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் கொரோனா சிறப்பு முகாம் நடந்தது. இதில் 56 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
  • பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

  மதுரை

  தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறையவில்லை. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று 1000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார ஊழியர்கள் தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

  மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 11 ஆயிரத்து 628, 2-வது டோஸ் 6 ஆயிரத்து 815, பூஸ்டர் 9 ஆயிரத்து 832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 275 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

  மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 472, 2-வது டோஸ் 14 ஆயிரத்து 501, பூஸ்டர் 11 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 26 ஆயிரத்து 853 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

  மதுரை அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் 75, 2-வது டோஸ் 555, பூஸ்டர் 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1501 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் 9, 2-வது டோஸ் 8, பூஸ்டர் 43 தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

  மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் முதல் டோஸ் 12 ஆயிரத்து 184 பேருக்கும், 2-வது டோஸ் 21 ஆயிரத்து 879 பேருக்கும், பூஸ்டர் 22 ஆயிரத்து 626 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 56 ஆயிரத்து 689 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது.
  • 2,681 பணியாளர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல் 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல் 14 வயது பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

  இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இன்று நடந்த 34-ம் கட்ட முகாமில் செலுத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
  • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

  திருப்பூர் :

  தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

  சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது.
  • இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

  சென்னை:

  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

  தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
  • வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

  மதுரை

  தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் நோய் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

  அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடந்து வருகிறது.

  இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இன்று 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. 1600 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

  மதுரை மாவட்டத்தில் முதல் டோஸ்- 87 சதவீதம் பேரும், 2-வது டோஸ்- 77 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் ஆக 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

  மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

  கோவை 

  கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கைகளாலும் பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது.

  மேலும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரித படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டத்தில் 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 339 முகாம்களும் நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்தி க்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

  கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2888241 நபர்களுக்கு முதல் தவணை 2646998 இரண்டாம் தவணையும் 15:18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 140239 முதல் தவணை 110400 இரண்டாம்தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90250 முதல் தவணை 62619 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் என மொத்தமாக 62,32,938 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தடுப்பூசியானது இரண்டாம் தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.

  இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
  • காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

  விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 16,82,050 (98.50 சதவீதம்) நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 15,81,862 (92.64 சதவீதம்) நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி 2,69,354 நபர்களுக்கும் என மொத்தம் 35 லட்சத்து 33 ஆயிரத்து 266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

  கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.