search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலையம்பாளையத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
    X

    கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

    மலையம்பாளையத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

    • இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
    • மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம் பாளையம் கிராமத்தில், கால்நடை தோல் கட்டி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு கேப்ரிபாக்ஸ் என்ற வைரசால் தோல் கட்டி நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்த நோய் மழைக்காலங்களில் ஈக்களின் மூலமாக பரவுகின்றது .நோய் பாதிப்பின் அறிகுறிகளாக கால்நடைகள் தீவனம் உண்ணாமல் இருத்தல், கண் மற்றும் மூக்குகளில் இருந்து சளி போன்ற நீர் தென்படுதல், காய்ச்சல், பால் கறக்கும் மாடுகளில் திடீரென பால் குறைதல், உடம்பு முழுவதும் கட்டிகள் தென்படுதல், கால் வீக்கம், கழிச்சல் போன்றவை காணப்படும்.

    இந்த நோயை கட்டுப்படுத்த, நோய் வாய்ப்பட்ட, கால்நடைகளை இடம் விட்டு இடமாற்றாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம். மாடுகளின் மேல் ஈ மற்றும் கொசு அமராமல் வைத்திருக்கவேண்டும்.மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில், கால்நடை மருத்துவர்கள், மலையம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் கௌதம் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×