குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடை பெற்றது.வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ெதாடங்கி வைத்தார்.

முகாமில் 5 வயதிற்கு கீழ் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசி பணியை கிராம சுகாதார செவிலியர் மரியம்மாள் மேற்கொண்டார்.

இந்த முகாம் நேற்று தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.

எனவே முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com