search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    முகாமை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி.

    கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பொங்கலூா் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் வினீத் பேசியதாவது:-

    தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் இந்த முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.அதைத்தொடா்ந்து மேய்க்கால் நில புனரமைப்பு திட்டத்தின் கீழ் தீவன மரம் மற்றும் தீவனப்பயிா் நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் (பொறுப்பு) குமாரரத்தினம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×