search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 91 பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை
    X

    ஈரோட்டில் 91 பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய மான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடை களை அணிந்து மசூதி களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதே போல் ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ரஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பெரிய அக்ர ஹாரம் தாவூதிய்யா மசூதி, காளைமாட்டு சிலை ஜாமியா மசூதி, காவேரி ரோடு ஜன்னத்பிர்தவ்ஸ் மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி,

    ஓடை ப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, கனிராவுத்தர்குளம் ஜாமியா மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அந்தியூர் பர்கூர் சாலை யில் உள்ள மஜித் தேனூர்பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீத் தலைமையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது

    இதில் சுன்னத் ஜமாத் செயலாளர் ஷனவாஸ், கமிட்டி உறுப்பினர் கதர் ஹைதர் கான் மற்றும் சுன்னத் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொணடனர். இந்த தொழுகையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்பின்பு பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    கோபிசெட்டிபாளையம் முத்துசாமி வீதி ஈத்கா பள்ளிவாசல், நல்ல கவுண்டம்பாளையம், கலிங்கியம், சாமிநாதபுரம், கடத்தூர் உள்பட 13 இடங்களில் பக்தீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொரு வர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதே போல் சத்திய மங்கலம் மணிக்கூண்டு பெரிய பள்ளி வாசல், வண்டி பேட்டை சின்ன பள்ளி வாசல், வடக்கு பேட்டை நேருநகர் உள்பட 8 பள்ளி வாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

    மேலும் தாளவாடி ஜாமிய மஜித் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஏழை களுக்கு குர்பானி வழங்க ப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், பவானி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் 91 மசூதிகளிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    Next Story
    ×