பெண் யானையின் உடல் இன்று பிரேத பரிசோதனை

பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
பெண் யானையின் உடல் இன்று பிரேத பரிசோதனை
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் பவானிசாகர்வன சரகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

அப்போது யானை இறந்து சில நாட்கள் ஆனது தெரியவந்தது. மேலும் குடற்புழு நோயால் யானை இறந்து இருக்கலாம்என்றும் தெரியவந்தது. இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன் பின்னர்தான் யானை சாவுக்கான முழு காரணமும் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com