search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
    X

    நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

    மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

    இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

    Next Story
    ×