search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "removal"

    • சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • வாங்கல் காவேரி ஆற்று பகுதியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல், காவிரியாற்று பகுதியில் சீமைகருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாங்கல், காவிரியாற்று பகுதியில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. தற்போது, காவிரியாற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. இதனால், நீர்த்தேக்க கிணறுக ளுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பல கிராமங்களுக்கு போதிய, காவிரி குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. எனவே, நீர்சேமிப் புக்கு பாதகமாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குளத்தின் வரத்து வாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
    • ஊராட்சிமன்ற தலைவர் மனு கொடுத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி கும்மங்குளத்தில் தனி நபர் ஒருவர் குளத்து வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்ததாக, ஊராட்சிமன்ற தலைவர் அகஸ்டின், தாசில்தார் செந்தில் நாயகியிடம் புகார் மனு கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிரு ந்த வரத்து வாரியை அகற்றினர்.

    கும்மங்குளத்தில் உள்ள வரத்து வாரி அக்கிராமத்தில் உள்ள தனிந பர் ஒருவர் வீட்டின் அருகில் உள்ள வரத்து வாரிகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர் இந்த ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் போலீசார் மற்றும் புதுக்கோட்டைவிடுதி கிராம நிர் வாக அலுவலர்கள் வீரமுத்து, மாரீஸ்வரன் மற்றும் ஆலங்குடி வரு வாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மண்டல வட்ட துணை தாசில்தார் பழனியப்பன் கிராம மக்கள் முன்னிலையில் வரத்து வாரி மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி தூய்மை செய்தனர்.

    • திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    • பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
    • 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இது தவிர பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. பாலாற்றில் பல இடங்களில் விவசாயிகள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பொதுப்பணித்துறை வருவாய்த்துறை, போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் அகற்றினர். மேலும் விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை . இதையடுத்து திருமூர்த்தி அணையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றில் நடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். தொடர்ந்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    • வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.

    இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு‌ சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது.

    துணை சேர்மன் கான்முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரில் பல்வேறு வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய சேர்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் ஆக்கிர மிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குடிநீர் பாதைகளும், கழிவு நீர் பாதைகளும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • தீக்குளிக்க முயன்ற முதியவரை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது
    • 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் உள்ள தச்சன்கோரைப்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவ ர் அந்தப் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப்போல அந்தப் பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் சிலர் அனுபவம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் செல்வரா ஜ் நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் பொ ங்கல் வைத்து வழிபட முடியவில்லை என்று கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மேலும் 40 ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும், வேறு எதற்கும் பயன்படாத இடத்தில் நான் வசித்து வருவதாகவும் அதனா ல் தனக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்று செல்வராஜ் மனு அளித்திருந்தார்.

    இதையடுத்து ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் செல்வராஜ் வீடு உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே செல்வராஜ் மற்றும் அவரது மருமகள் சுதா ஆகிய இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மேலும் செல்வராஜ், சுதா ஆகியோர் வீட்டிற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வீட்டை பொக்லைன் எந்திரத்தின் உதவுயுடன் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன.

    கடலூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் நடைபெற்றது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

    அப்போது எந்தவித பிரச்சினை சம்பவம் எதும் நிகழாமல் இருக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.

     நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

    வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சாலையோர ஆக்கிரமிப்புகள் 2-வது நாளாக அகற்றப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் மெயின் ரோட்டில் யூனியன் அலுவலகம் அருகே சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இந்தப்பணியில் மேலூர் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது கடைக்கா ரர்களுக்கும், அலுவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மேலூர் நகராட்சி கவுன்சிலர்கள் திவாகர், ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள உதவினர். 2வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கட்டளை மேட்டு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
    • சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன

    கரூர்:

    மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் வலது கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் மகாதானபுரம் வடக்கு பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு வாய்க்காலின் வலது கரையில் கம்பி வேலி அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக புகார்கள் வரபெற்றதை அடுத்து சர்வே (நில அளவீடு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன் தலைமையில் மாயனூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

    ×