search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "removal"

    • தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்.
    • மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமன்னா நீர் ஏற்று நிலையத்தின் அருகே பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இந்த பணிக்காக தண்ணீரினை அதிகமாக மோட்டார் மூலம் உறுஞ்சி எடுக்க அந்த பகுதியில் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

    இந்த தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    எனவே இதனை அகற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இருப்பினும் அந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த பகுதியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும் சென்றனர்.

    ஆய்வில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் மட்டுமின்றி அதற்கு கீழ் பகுதியில் உள்ள திட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

    • யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
    • இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.
    • மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு பிள்ளையார் நகர் பகுதியில் அ.தி.மு.க கொடி கம்பம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

    இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.இதுகுறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அங்கு வந்து கேட்டதற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்கா மல் உத்தரசாமி வாகனத்தை எடுத்து சென்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    தி.மு.க ஒப்பந்ததாரர், அ.தி.மு.க கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
    • நெகிழி குவளைகள் போன்றவை தூய்மை பணியாளா்கள் மூலம் அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகரை குப்பையில்லா மாநகராக உருவாக்குவதற்காக மாநகரில் சிறப்புக் கூட்டு தூய்மைப் பணி முகாம் வாரந்தோறும் புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஆட்டு மந்தை தெரு, மீன் சந்தை உள்புறம், படைவெட்டி அம்மன் கோயில் தெரு, நெல்லுமண்டித் தெரு, காமராஜா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் சிறப்பு கூட்டு தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை மேயா் சண். இராமநாதன் தொடக்கி வைத்தாா்.

    இப்பணியில் 550 தூய்மை பணியாளா்கள், 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.

    இதன் மூலம், பல்வேறு இடங்களில் புல் செடிகள், முட்புதா்கள், மண் முட்டுகள் போன்றவை கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    மேலும், நன்னீா் தேங்கி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண் பாண்டங்கள், நெகிழி குவளைகள் போன்றவை கொசுப்புழு தடுப்பு களப் பணியாளா்களால் கண்டறியப்பட்டு, தூய்மைப் பணியாளா்கள் மூலமாக அகற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் சரவணகுமாா், மாமன்ற உறுப்பினா் பாப்பா சொக்கா ரவி, மாநகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, துப்புரவு ஆய்வாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • ரெயில்வேக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும் கேட்பாரற்று கிடக்கும் சிலாப் தண்டவாளம் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி துவங்கியது.
    • ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்படுமென பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். 

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையம் பகுதி முதல் இரண்டாவது ரெயில்வே கேட் நிறுத்தம், என்.ஆர்.கே., புரம் வரை, கிழக்கு பகுதியில் ெரயில் தண்டவாளத்தின் இருபுறமும் மற்றும் மேற்கு பகுதியில் அணைப்பாளையம் வரை குடியிருப்புகள் உள்ளன. தண்டவாளத்தில் இருந்து 30 மீ., தொலைவில் வீடுகள் உள்ள நிலையில் அவ்வப்போது ெரயில்வே தளவாட பொருட்கள் திருடப்பட்டு வந்ததாக புகார்கள் வந்தது.

    திருட்டை தடுக்கவும் ெரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும் கேட்பாரற்று கிடக்கும் சிலாப் தண்டவாளம் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி துவங்கியது.ராட்சத கிரேன் உதவியுடன் பயன்பாடற்ற நிலையில் ஓரமாக கிடந்த தண்டவாளம், சிலாப் கற்கள், நவீன ெரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டது. இவை ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்படுமென பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். 

    • நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
    • சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, பாளை பகுதிகளில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

    சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    • ஆலங்குடியில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல் குடி வருவாய்க்கு உட்பட்ட குருந்தடிமனை குக்கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த வரத்துவாரி புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தார். மேலும் அந்த பகுதியினர் அரசு இடத்தின் வழியாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் ஆக்கிரமித்திருப்பதாக ஆலங்குடி த ாசில்தாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் செந்தில்நாயகி, வெண்ணவால்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் உதவியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் குப்பையை அகற்றிவிடுமா று தனிநபரை எச்சரித்து விட்டு வந்தனர்.

    ஆனால், அந்த தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் குப்பைகளை அகற்ற முன்வராததால், நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய் து றையினர் ஆலங்குடி போலீசாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிக்கப்ப ட்ட புறம்போக்கு இடத்தில் இருந்த குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    • தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது.
    • கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது. எனவே வடிகால்களில் இருந்து வரும் நீரோட்டத்திற்கு உள்ள தடைகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீரோட் டத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுவதற்கும் கரைகள் தூர்ந்த பகுதிகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான எஸ்.கே.எஸ்.ஆர் காலனி மற்றும் கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
    • தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    • தனி நபர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • வருவாய்துறையினர் நடவடிக்கை

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி, வேங்காம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடங்களில் தனிநபர் ஒருவர் 15 சென்ட் நிலத்தை வேலி போட்டு சுமார் 8 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த முள்வேலியை அகற்றினர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, வட்ட நில அளவையர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
    • சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான உழவர் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பிரத்தியேக ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. அங்கு வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் கருவேல மரங்களை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது விவசாய தொழிலை நாசமாக்கி வருகிறது. கருவேல மரங்களை எப்படி அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது.

    தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலடசுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், சாலையோர சங்க நிர்வாகிகள் வடிவேலு, துரியன், வீரமணி, அழகுராஜ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது அவர்கள் பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் புதுவையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடலூர் சாலை முதலியார் பேட்டை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்க்கு சிறு குறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மற்றும் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரப்பாலத்தில் இருந்து முள்ளோடை வரை புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    முதல் கட்டமாக இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பக்கத்திலும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இயந்திர உதவியோடு செய்து வந்தனர்.

    ஆனால் பெயரில் மட்டுமே இந்த ஆக்கிரமிப்பு ஆகற்றும் பணி நடைபெற்றது. விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர் மட்டுமே தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு அதே நிலையில் காணப்படுகிறது.

    சாலை நடுவே தடுப்புகள் அமைத்ததால் இருவழி சாலையாக உள்ளது. சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    எனவே புதிய தார் சாலை போடுவதற்கு முன்பாக சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×