என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் குவிந்த மணல் அகற்றம்
- சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
- தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.
இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
Next Story






