search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "major challenge"

    • சதுரகிரி மலையில் கழிவுகளை அகற்றுவதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
    • மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவீகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. பஞ்ச பூத லிங்க தலமாக போற்றப்படும் இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    சுந்தர மகாலிங்கம், இரட்டை லிங்கம் ஆகியவை சுயம்புலிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக தெய்வீ கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லிக்கின்றனர்.

    18 சித்தர்களும் சதுரகிரி யில் வந்து வழிபாடு நடத்துவதாக நம்பிக்கையாக உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ண மியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு 12-ந்தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு 15, 16, 17-ந்தேதிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் அடி வாரத்தில் இருந்து அனு மதிக்கப்பட்டனர்.

    பக்தர்களின் உடைமை களை சோதனை செய்த துடன், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட் கள், பிளாஸ்டிக் பாட்டில் கள் உள்ளிட்ட வற்றை கொண்டு செல்லக்கூடாது என கண்டிப்புடன் தெரி விக்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சென்றதால் மலை பாதைகள் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சேர்ந்தது. அது மட்டுமின்றி தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டதால் அதனால் சேர்ந்த கழிவு களும் சதுரகிரி மலையில் குவிந்தன.

    17-ந்தேதி வரையுடன் அனுமதி முடிந்த நிலையில் மறுநாள் 18-ந்தேதியில் இருந்து வனப்பகுதியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மூடை மூடையாக சேர்க்கப்பட்ட குப்பைகளை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இன்னும் மலைப்பகுதியில் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கிறது. அதனை அகற்று வதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

    சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைப்பாதை பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சதுரகிரியில் கழிவுகளை முழுவதுமாக அகற்ற ஒரு வாரம் காலம் ஆகும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
    • சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான உழவர் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பிரத்தியேக ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. அங்கு வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் கருவேல மரங்களை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது விவசாய தொழிலை நாசமாக்கி வருகிறது. கருவேல மரங்களை எப்படி அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது.

    தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலடசுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×