search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainages"

    • தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது.
    • கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது. எனவே வடிகால்களில் இருந்து வரும் நீரோட்டத்திற்கு உள்ள தடைகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீரோட் டத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுவதற்கும் கரைகள் தூர்ந்த பகுதிகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான எஸ்.கே.எஸ்.ஆர் காலனி மற்றும் கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×