search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur-Palladam Road"

    • தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
    • வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×