search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னேற்பாடு"

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    • மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொது மக்களை தங்கவைப்பதற்கான தற்காலிக தங்குமிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் ஆகிய மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

    கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
    • தீயணைப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன

    கோவை,

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் சகல உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    தீயணைப்பு அலுவலகங்களில் ரப்பர் படகு, அறுவை எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளதா? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்க ளை, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    • கலெக்டர் அரவிந்த் ஆலோசனை
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

    குடியரசு தின விழா விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உடன் இருந்தார்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
    • வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறும்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரது தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான விஜயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விளிம்பு நிலை மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகக் மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்து செயல் திட்டம் தயாா் செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி வைக்க பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாநகராட்சியில் 20 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு பணியும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 2 பணிகளும், பேரூராட்சிகளில் 17 பணிகளும் நவம்பா் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் தொடா்புடைய அலுவலா்கள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா்கள் சரவணகுமாா், செந்தில்முருகன் (கும்பகோணம்), கோட்டாட்சியா்கள் பிரபாகா் (பட்டுக்கோட்டை), லதா (கும்பகோணம்), ரஞ்சித் (தஞ்சாவூா்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்‌.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.

     நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

    வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தேர்வு
    • சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ வீரர்கள் வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற

    21-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. அங்கு நடைபயிற்சி, விளையாட்டுபயிற்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் விளை யாட்டு அரங்கத்திற்குள் செல்ல அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடசேரி உழவர் சந்தை திடல்,அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் பகுதி,மாநகராட்சி புதிய கட்டிடம் பகுதி யில் ஷெட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் ராணுவத்திற்கு இரவு நேரத்தில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தினமும் 3000 பேர் பங்கேற்கும் வகையில் தேர்வு நடக்கிறது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்கு வசதிகளும் அங்கு செய்யப்பட்டு உள்ளது.ஆள் தேர்வு முகாம் நடை பெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் நாகர்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

    திருவனந்தபுரம், கோவை, சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இன்று மதியத்துக்கு பிறகு இங்கு வருகை தருகிறார்கள். அண்ணா விளையாட்டரங்கம் ராணு வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதையடுத்து ஆட்கள் தேர்வுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும் போது உடற்பயிற்சி தேர்வு நடைபெறும்.அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்கள் மேற்பார்வை யில் இந்த பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த பணிகளை நாளைக்குள் முடிக்க திட்ட மிட்டு உள்ளனர்.

    • நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்
    • குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாக தோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருமணங்கள் கைகூடவும், தோஷங்கள் நீங்கவும், நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட் டம் மட்டுமின்றி வெளி யூர்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து தரிச னம் செய்து செல்கிறார்கள்.

    குறிப்பாக ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர் சிலை களுக்கு பால் ஊற்றி வழிபடு வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த தான் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 21-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 28-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கி ழமை செப்டம்பர் 4-ந் தேதியும், நான்காவது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11-ந்தேதியும், வருகிறது. 4 ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணி கள் தற்போது தொடங்கப் பட்டு உள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறு பாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.தற்போது வெயில் அதிகமாக உள்ளது. மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. வெயில் மழையிலும் பொதுமக்கள் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆவணி முதல் ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து அவர்க ளுக்கான அடிப்படை வசதி களை மேம்படுத்தவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளது.

    மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பக்தர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ×