search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவாலய வணிகவளாக கட்டடத்தில் நிறுவப்பட்டிருந்த இயேசு சிலை அகற்றம்
    X

    கட்டடத்தின் மேல் நிறுவப்பட்டிருந்த இயேசு சிலை.

    தேவாலய வணிகவளாக கட்டடத்தில் நிறுவப்பட்டிருந்த இயேசு சிலை அகற்றம்

    • வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.

    இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு‌ சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×