search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram"

    • பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகிறது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மரங்கள் உள்ள இடங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. இவற்றை சிலர் மருந்திற்காக வேட்டையாடுவதாக புகார் எழுந்துள்ளது. கூட்டமாக வாழும் மரங்களில் சிலர் கற்களை வீசி விரட்டுகின்றனர். எனவே குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேணடும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால்கள் கிராமப்பகுதி களில் காணப்படுகின்றன. வவ்வால்களால் யாருக்கும் பெரிய அளவில் தொல்லை கிடையாது. இரவில் மட்டுமே தங்களுக்குரிய இரையை தேடி செல்கின்றன. பழந்தின்னி வவ்வால்கள் இரவு நேரங்களில் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும். பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். பூக்களில் உள்ள தேனையும் குடிக்கும், என்கின்றனர்.

    வவ்வால்கள் பெரும்பாலும் பழைய கட்டிடங்கள், அடர்ந்த மரங்களில் வாழ்கின்றன. மருத்துவ குணமிக்கதாக கருதி சிலர் வவ்வால்களை வேட்டையாடு கின்றனர். இதன் விளைவாக ஆண்டு தோறும் பழந்தின்னி வவ்வால்க ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

    இவற்றை காண்பதே அரிதாகி வரும் நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் கல்வீசி தாக்குவது உள்ளிட்ட தொந்தரவுகளை செய்வதால் அச்சத்தில் மின் கம்பிகளில் அடிபட்டும் இறக்கின்றன.

    எனவே தற்காலத்தில் குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள் ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், மனித வள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளருமான நந்த குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, பிரதம மந்திரி சுவாஸ் யோஜனா, நீலப் புரட்சி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் முடிவுற்ற பணிகள் மேற்கொள்ளப் படும் பணிகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். முதலமைச்சர் அறிவுரைப்படி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்பெற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்திற்கு பின் தொடர்ந்து அச்சுந்தன்வயல், தேவேந்திர நல்லூர் பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் நந்தகுமார் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • பாடாவதியான ரெயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை, உப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக தலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வேண்டுதலுக் காக வருகின்றனர். இது தவிர ஏராளமான வெளி நாட்டினர் ராமேசுவரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலை யம் வழியாக சென்னை, கோவை, திருப்பதி, போன்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகள் எஸ்-1 முதல் எஸ் 13 வரை இணைக்கப் பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ராமேசு வரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கிழிந்த இருக்கையில் தையல் போடப்பட்டு உள்ளது. தரை தளம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் கதவுகளில் உள்ள இடைவெளியில் குளிர் காற்று வெளியே செல்வதால் பெட்டிக்குள் வெப்பகாற்று ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதியில்லை. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளிர் சாதன ெரயில் பெட்டிக்குள் சென்றால் அனல் காற்று தான் வீசுகிறது. தரை தளம் படு மோசமாக உள்ளது. முன்பதிவு செய்து செல்வதை விட ஜெனரல் பெட்டியில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.

    கழிப்பறையில் சோப், பேப்பர் போன்றவைகளை காண முடியவில்லை. ராமேசுவரம் வரும் யாத்ரீகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பாடா வதியான ெரயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமிதேவி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வை யாளர் முரளிதரன் அனை வரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகராஜா,பவர் நாகேந்திரன்,கலாராணி, கவுன்சிலர்கள் குமார், முருகன், மண்டல தலை வர்கள் வீரபாகு, ஜோதிமுரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • ராமநாதபுரத்தில் 26-ந் தேதி மீனவர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
    • கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் கலெக்டரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வருகிற 26-ந்தேதிமாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடுஅரசுகலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டஅரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் கீழ்காணும் பாடப்பிரிவுகளில் சிறந்த இசை ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில்,தேவாரம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்புகள் நடைபெற உள்ளன.

    2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வயது வரம்பு 12 முதல் 25 வயது வரைக்கு உட்பட்டவர்கள் சேரலாம். கல்வித் தகுதி குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    பயிற்சி காலம் 3ஆண்டுகள். பயிற்சி கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325-ம் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படும். அரசுவழங்கும் சலுகை இலவச பஸ் பயணஅட்டை, கல்வி உதவித்தொகைமாதம் ரூ.400, அரசுமாணவர்விடுதி வசதி அளிக்கப்படும்.

    இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள்தலைமைஆசிரியர் மாவட்டஅரசு இசைப்பள்ளி, எண் 14,கவுரிவிலாஸ் பேலஸ், அரண்மனை ராமநாதபுரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    • முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது.
    • ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் பிள்ளைக்காத்த காளியம்மன், கோட்டைமுனி கருப்பணசாமி கோவிலில் 2-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா தர்மகர்த்தா சரவணன் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில் சமயராஜ், முனியாண்டி தலைமையில் ஒயிலாட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு இடையர் வலசை சக்தி வடிவேல் முருகன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் பிள்ளைக்காத்த காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பொதுமக்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.

    கருப்பணசாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களின் சார்பில் அன்னதானமும் நடந்தது.அம்மன் கரகம் தென் கடற்கரைக்குச் சென்று கடலில் பூஜிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கோவில் கமிட்டி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்கி, ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் பாரதிநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தான தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.நகர செயலாளர் பாலா வரவேற்றார்

    கடந்த வாரம் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்று சிறை சென்றவர் களை விடுவிக்க உறுதுணை யாக இருந்த மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக வைத்து புதிய ஒன்றியத்தை உரு வாக்க கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அருளுக்கு இக்கூட் டத்தில் நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் நன்றி தெரிவித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, கீழக்கரை நகரச் செயலாளர் லோக நாதன், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் முனிய சாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா ளர் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    • பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எஸ். ஜெ.நாடார் மெட்ரிக் பள்ளி 26-ம் ஆண்டு விழா, விளையாட்டு, பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 18 மாணவ- மாணவிகளுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பட்டம் வழங்கினார்.

    நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் களரி குகன், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க தலைவர் ஜெயமுருகன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் விஸ்வநாதன், நாடார் மகாஜன சங்க நகர் தலைவர் மணிகண்டன், நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிரணி தலைவர் பாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு விழாவில் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான், தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பவுலியன்ஸ், சரவணன், திருப்புல்லாணி முத்தரையர் சங்க தலைவர் முனியசாமி, வீரமுத்தரையர் சங்கத்தலைவர் செல்வம், தாளாளர் இளையராஜா, கல்வி குழு தலைவர் சுந்தரம், முதல்வர் உமா லிங்கேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முகமது நபியை அவதூறாக விமர்சித்து பேசியதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் சந்தைத் திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிசா, மாநில செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர்கள் அப்துல் கலாம், ஆசாத், நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

    ராமேசுவரம், கீழக்கரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-1 பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால்  காஞ்சிரங்குடி, கோரைகூட்டம், கல்லகுளம், செங்கள்நீரோடைஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள நாகச்சி பீடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்  பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,  கழுகூரணி, குடிசை மாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி)அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை  ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

    ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் தங்கச்சிமடம் பீடரில்  அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, சந்தியாநகர், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என்று  ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
    ×