பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா

பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.
பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா
Published on

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com