search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rafael nadal"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    பாரீஸ்:

    உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரபெல் நடால். உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அவர் களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவர்.

    இதன் காரணமாக 32 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

    அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தார்.

    வேறு எந்த வீரரும் ஒரு கிராண்ட் சிலாமில் இதுவரை அதிகமான பட்டம் வென்றது கிடையாது.

    வருகிற 26-ந்தேதி தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிசிலும் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்நிலை வீரர் ஜோகோச்சை (செர்பியா) வீழ்த்தினார். இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    களிமண் தரையில் (கிளே) விளையாடுவதிலும் மன்னரான அவர் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள கடுமையாக போராடுவார். நடால் ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், விம்பிள்டனை 2 தடவையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 1 முறையும் வென்றுள்ளார்.

    சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாம் பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 6+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 8+ அமெரிக்க ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 15 கிராண்ட் சிலாமை பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 4+, அமெரிக்க ஓபன் 3) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    நடாலின் பிரெஞ்சு ஓபன் ஆதிக்கத்தை இந்த முறை தகர்க்க வேண்டும் என்ற வேகத்தில் ஜோகோவிச், பெடரர் உள்ளனர்.

    இதேபோல் டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), டிஸ்டிபயாஸ் (கிரீஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென் டினா) போன்ற வீரர்களும் நடாலுக்கு சவாலாக விளங்கலாம்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    ரோம்:

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



    பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால்,  கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். 

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் ரபேல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் இவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். 
     
    ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபேல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
    மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்ட்கார்லோ டென்னிசின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் பாபியோ போக்னினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #MonteCarlo #RafaelNadal #Fognini
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், உலகின் 18-ம் நிலை வீரரான இத்தாலி நாட்டை சேர்ந்த பாபியோ போக்னினிய்ம் மோதினர்.

    இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரபேல் நடால் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல் நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் துசான் லாஜோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் டேனில் மெட்விடெவை (ரஷியா) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #MonteCarlo #RafaelNadal #Fognini
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை எதிர்கொண்டார்.

    இதில் ரபேல் நடால் தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal 
    காயம் காரணமாக நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். #RafaelNadal
    டென்னிஸ் உலகத் தரவரிசையில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் முதல் இடத்தை வகிக்கிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் மார்ட்டின் டெல் போட்ரோவிற்கு எதிராக விளையாடும்போது முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.


    ஜோகோவிச்

    இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள என நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடர்களில் இருந்து நடால் விலகுவதால் 1100 ஏடிபி புள்ளிகளை இழக்க வாய்ப்புள்ளது. இதனால் 3-வது இடத்தில இருக்கும் ஜோகோவிச் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் 
    பாசிலாஷ்விலியும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை  கைப்பற்றினார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

    காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன்  மோதுகிறார். #USOpen2018 #RafaelNadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவை விழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் கச்சனோவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ரபெல் நடால் சுதாரித்துக் கொண்டு தனது அதிரடியை ஆரம்பித்தார். அதனால் இரண்டாவது செட்டை 6 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் கச்சனோவ் நடாலுக்கு கடும் சவாலாக விளங்கினார். மூன்றாவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும் ரபெல் நடால் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ரபெல் நடால் 5 - 7, 6 - 5, 7- 6, 7 - 6 என்ற கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup #Tsitsipas #RafaelNadal
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 - 2 என எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×