என் மலர்
செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - ரபேல் நடாலை தோற்கடித்து இறுதிக்கு முன்னேறினார் ஸ்டெபான்ஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் ரபேல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் இவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபேல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story