என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tsitsipas"

    4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார்.

    இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் ஒருவராக மெட்வெடேவ் பார்க்கப்பட்டார்.

    இருப்பினும் அவர் அவர் காலிறுதிக்கு முந்தய சுற்றில் வெளியேறியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு 4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை வீழ்த்தி இளம் வீரர் ஹோல்கர் ரூனே  வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். ரூனே 7-5 3-6 6-3 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
    • இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சிட்சிபாஸ் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
    • முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷிய வீரர் டேனில் மெதவதேவுடன் மோதினார்.

    இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், சிட்சிபாஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup #Tsitsipas #RafaelNadal
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 - 2 என எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×