search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்"

    • புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
    • பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    சென்னை:

    மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
    • இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    துபாய்:

    சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய துபாய் கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும் தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார்.

    மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் சீயோன்-ஆல்வின் கல்வி குழுமம் சார்பில் 2-வது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள சீயோன் பள்ளியில் நடைபெற்றது. இதில் 534 பேர் பங்கேற்றனர். அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் 6 வீரர்கள் 7 புள்ளிகளுடன் இருந்தனர். டை பிரேக்கர் முறையில் தமிழக வீரர் ஆயுஷ் ரவிக்குமார் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    அவருக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. கோகுல் கிருஷ்ணா, ராமகிருஷ்ணன், ஹரிகணேஷ், யஷ்வந்த், ஆதித்யா ஆகியோர் 2 முதல் 6-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    • முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
    • பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    கோவை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 38-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    16 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் மீட்டர் ஆட்டத்தில் அரியானா வீரர் நிஷாந்த் 5 நிமிடம் 27.02 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர்கள் மொத்தம் 170 புள்ளிகளை குவித்தனர். பெண்கள் பிரிவில் அரியானா 244 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அரியானா கைப்பற்றியது. அந்த அணி 411 புள்ளிகளை பெற்றது. தமிழ்நாடு 362 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசம் 238 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார். 

    • மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
    • 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீர்காழி குறு வட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெறும்.

    இந்த போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது. போட்டிகளில் அனைத்து வகையான குழு போட்டிகளும், தடகள போட்டிகளும் நடத்தப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வளைகோல் பந்து மூன்று பிரிவுகளிலும் முதலிடம், கூடை பந்தாட்டத்தில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம், பூப்பந்தாட்ட போட்டியில் ஐந்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் தடகளத்தில் மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் 14 போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் 9 போட்டியிலும் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் ஒன்பது போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்று போட்டியிலும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவ,மாணவிகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் ஜூனியர் பிரிவில் ஆர். சுருதிஹா 10 புள்ளிகளும், சீனியர் பிரிவில் ஏ அபர்ணா 13 புள்ளிகளும், சூப்பர் சீனியர் பிரிவில் சமினா ராகவி 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

    சீர்காழியில் நடைபெற இருக்கும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன் ஆகியோரை பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன் பள்ளியின் முன்னாள் செயலர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் சொக்கலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபாலி பழைய மாணவர் சங்கச் செயலர் முரளிதரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடை நம்பி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், சீனிவாசன் மற்றும்ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான ஆக்கி போட்டி திருநெல்வேலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் உடற்கல்வி ஆசி ரியர் எல்.ராஜூ நினைவுக் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையே யான 3-ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டிகள் 3 நாட் கள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 12 அணிகள் விளை யாடின.

    இதன் இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது.இதில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு விடுதி அணியும், பாண்டிய ராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் திருநெல் வேலி அணி 2:0 என்ற கோல் கணக்கில் பாண்டிய ராஜபுரம் அணியை வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நி லைப்பள்ளி அணியும்,3-வது இடத்தை ராமநாத புரம் மாவட்ட விளை யாட்டு விடுதி அணியும், நான்காவது இடத்தை திரு நகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணியும் பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழா விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார். எவர்கிரேட் ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், உதவி செயலர்கள் சரவ ணன், ரமேஷ், இணைச்செயலர் வெள்ளைச்சாமி ஆகி யோர்முன்னிலை வகித்த னர்.

    வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முதல் பரிசிற்கான கோப்பையினை யும், தொழிலதிபர் சீனிவா சன் இரண்டாம் பரிசிற்கான கோப்பையினையும், மாநக ராட்சி அதிகாரி பாஸ்கரன் மூன்றாம் பரிசிற்கான கோப்பையையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங் கினர்.

    ஆட்டநாயகன் விருதினை மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா வழங்கினார். முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

    • மாவட்ட ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் தேசியவிளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை பிரிட்டானியா நீயூட்ரிசன் பவுன்டேசன் சார்பாக 14வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்டஅளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 8அணிகள் விளையாடினர்.இதன் இறுதிபோட்டியில் திருநகர் இந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திட்டஅலுவலர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வினோத் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். முடிவில் உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றிகூறினார். இதன்ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், வாஞ்ஜிநாதன், தேவிப்ரியா, பானுப்ரியா, ஜஹீன்கௌசர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெற்றி கோப்பை பயணம்
    • கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது

    கன்னியாகுமரி :

    ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி வெற்றி கோப்பையை கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வெற்றி கோப்பையை சென்னையில் கடந்த 20-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    விழாவின் தொடக்கமாக ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ரெமோ மனோ தங்கராஜ் முன்னிலையில் மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக செயலாளர் டிக்சன் தலைமையில் விளையாட்டு வீரர்கள் விழா மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அந்த வெற்றி கோப்பையை அவர்கள் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினார்கள். குமரி மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக தலைவர் டாக்டர் டங்ஸ்டன் சென்னையில் நடைபெறும் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி பற்றி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் வெற்றி கோப்பை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து ஆசிய ஆக்கி போட்டிக்கான குறியீட்டு சின்னம் வெளியிடப்பட்டது. பின்னர் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட பலர் ஆக்கி மட்டையை கையில் தாங்கி பந்தை அடித்து விளையாடிய காட்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், உதவி கலெக்டர் குணால் யாதவ், கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அதன் பிறகு இந்த ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ஆக்கி விளையாட்டு வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இதற்காக தனியாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் பயணமாக எடுத்துச்சென்றனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வெற்றிக்கோப்பை பயணம் நெல்லை, விருதுநகர், மதுரை உள்பட 34 மாவட்டங்கள் வழியாக வருகிற 30-ந்தேதி சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

    • மதுரை அணி சாம்பியன் பெற்றது.
    • பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

    மதுரை

    மதுரை திருநகர் விளையாட்டு மைதானத்தில் தென்மாவட்ட அளவிலான 15 வயதிற்குட்பட்டோர் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. தென்மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.

    இதில் கால் இறுதி போட்டியில் திண்டுக்கல் எச்.எப்.ஏ. அணியையும், அரை இறுதி போட்டியில் அக்மே அரினா அணியையும் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இறுதி போட்டியில் அக்மே எப்.ஏ.ஏ. அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

    • மாநில கபடி போட்டி வடிவேல்கரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேதாஜி கிரிக்கெட் கிளப், பி.டி.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து 5-ம் ஆண்டு மாநில கபடி போட்டியை நடத்தியது. பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டி யன் தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்திய பிரியா முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் 106 அணிகள் பங்கேற்று மின் ஒளியில் இரவிலும் பகலிலும் விளையாடினர். இறுதியில் 5 அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

    இந்த போட்டியில் முதல் இடம் பெற்ற வடிவேல்கரை அணிக்கு கே.டி.ரஞ்சித் நினைவு சுழல் கோப்பையும் மற்றும் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் சார்பாக ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் வழங்கப் பட்டது. 2-ம் இடம் பிடித்த தொண்டூர் அணிக்கு மாயக் கண்ணன் சகோதரர்கள் சார்பாக ஆர்.எஸ்.மீனாட்சி தர்மராஜ் நினைவு சுழல் கோப்பை, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாசாமி நினைவாக வைரமணி சகோதரர்கள் சார்பாக ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடம்பிடித்த மேலக்குயில்குடி அணிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராஜா சகோதரர்கள் சார்பாக சோனை நினைவு சுழல் கோப்பையும், சுந்தர ஜெயமணி சார்பாக ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதுபோல் 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    போட்டியின் நடுவர்களாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகத்தை சேர்ந்த மூர்த்தி தலைமையில் சுரேஷ்,பாண்டி செல்வம், பாலமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் பணி செய்தனர். இதன் ஏற்பாடுகளை நேதாஜி கிரிக்கெட் கிளப் மற்றும் பி.டி.பி விளையாட்டு கிளப்பினர் செய்திருந்தனர்.

    • பரிசு பெற்ற அணியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார்.
    • கோ-கோ, பேட்மிண்டன், கபடி போட்டிகளை நடத்தவும் ஏற்பாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீசா ருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. சப்-டிவி சன்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் அணியும் நாகர்கோவில் சப்-டிவிசன் அணியும் மோதியது. இதில் நாகர்கோவில் சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டியில் குளச்சல் சப்-டிவிசன் அணியும், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியும் மோதியது. இதில் கன்னியா குமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணிகள் தேர்வு பெற்று உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோது கின்றன.

    இன்று 2-வது நாளாக நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாருக்கான வாலிபால் போட்டி நடந்தது. கன்னியா குமரி சப் டிவிஷன் அணியும் குளச்சல் சப்-டிவிசன் அணியும் மோதியது. இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

    இதில் கன்னியாகுமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் சப்-டிவிசன் அணியும், தக்கலை சப்- டிவிசன் அணியும் அடுத்த போட்டியில் ஆடியது. இதில் தக்கலை சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து தக்கலை சப்-டிவிசன் அணியும், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியும் இறுதி போட்டியில் விளை யாடியது. இதில் கன்னியா குமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று பரிசு பெற்றது.

    பரிசு பெற்ற அணி யினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சாம் வேதமாணிக்கம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கோ-கோ, பேட்மிண்டன், கபடி போட்டிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நாலுமாவடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து 7-ம் ஆண்டு 'ரெடீமர்ஸ்' கோப்பைக்கான மாநில அளவிலான பொங்கல் பண்டிகை மின்னொளி கபடி போட்டி யை நடத்தினர்.

    போட்டிகள் நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-ம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-வது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் 3-ம், நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர்.

    விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திரு நீலகண்டன், அ.தி.மு.க. பிரமுகர்கள் திருப்பாற்கடல், விஜயகுமார், ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணிக்க நாடார் குடியிருப்பு பிரபாகரன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், அங்கமங்கலம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியம் விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×