search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2 exam"

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. #SSLC #PublicExam
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது.

    மார்ச் 14-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இறுதி தேர்வான சமூக அறிவியல் இன்று முடிந்தது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 மையங்களில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை (30-ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

    விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்ற பின்னர் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ந்தேதி வெளியாகிறது.

    10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ந்தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இன்றும் நிறைவு பெற்றன. #SSLC #PublicExam
    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்.

    தனியார் பிரவுசிங் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஜூன் 25-ந் தேதி - தமிழ் முதல் தாள்.

    26-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.

    27-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

    28-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

    29-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.

    30-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ், வணிகவியல்.

    ஜூலை 2-ந் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மனைஅறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல், அரசியல் அறிவியல்.

    3-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

    4-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம். #tamilnews
    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 154 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 747 மாணவர்களும்,10 ஆயிரத்து 267 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து014 பேர் 64 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது உடன் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பொன்முடி உடனிருந்தார்.

    தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 804 மாணவர்களும், 9 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கண் பார்வையற்றவர்கள் 5பேர் தேர்வு எழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாதவர்களில் 15 பேர் எழுதி 13 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். ஊனமுற்றவர்களில் 46 பேர் தேர்வு எழுதி 37 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கையால் எழுத முடியதாவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட 12 பேர் தேர்வு எழுதி 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 92.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.56 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் 1180க்கும் மேல் மதிப் பெண்களும், 78 பேர் 1151க்கு மேல் மதிப்பெண்களும், 196 பேர் 1125-க்கும்மேல் மதிப்பெண்களும், 315 பேர் 1000-க்கும் மேல் மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #Plus2Result #HSCResult #Plus2100%Pass
    சென்னை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.

    பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

    ஒட்டுமொத்தத்தில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,754. இதில் 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


     
    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு விவரங்களை http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #Plus2Result  #HSCResult #Plus2100%Pass
    12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    சென்னை:

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இம்மாதம் பல்வேறு தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன.

    முதல் கட்டமாக, 12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

    மேற்கண்ட மூன்று பொதுத் தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 27,72,384 மாணவர்கள் தேர்வெழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மனசோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளன்றுபெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மனசோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.



    அதேபோல், தன்னுடன் பயிலும் சக மாணவர்களில் எவரேனும் ஒருவர் மதிப்பெண் குறையும் என்ற மனசோர்வில் இருந்தால் சகமாணவர்கள் தன்னம்பிக்கை யூட்டி மனசோர்விலிருந்து வெளிக்கொணரவேண்டும்.

    தமிழகத்தைப் பொறுத்த வரையில், அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர் காலத்தை அரசு உருவாக்கி வருகிறது.

    எனவே, பெற்றோர்களும், மாணவ கண்மனிகளும், ஆசிரியபெருந்தகைகளும், ஊடகத் துறையைச் சேர்ந்த அனைத்துநண்பர்களும் சேர்ந்து தேர்வுமுடிவுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் பணியினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் நாளை தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட உள்ளது.#Exam #Result #Plus2 #TamilNadu
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

    அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

    விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக் கையில், www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். #Exam #Result #Plus2 #TamilNadu
    ×