என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி"

    • அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு.
    • வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், கனமழை பாதிப்பு எதிரொலியால் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • செம்மாண்டக்குப்பம், நாயக்கனஅள்ளி, தருமபுரி நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் தருமபுரி ரெயில் நிலையம்.

    தருமபுரி:

    தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பஸ் நிலையம், கடைவீதி அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், பழைய தருமபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஅள்ளி, ஏ. ரெட்டிஅள்ளி, வி.ஜி. பாளையம், செட்டிக்கரை,

    நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ. கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைசக்கொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டக்குப்பம், நாயக்கனஅள்ளி, தருமபுரி நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் தருமபுரி ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மொரப்பூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி, பண்டார செட்டிபட்டி, வத்தல்மலை, சொரக்காப்பட்டி, வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி,

    கே.என்.புதூர், கே.மோரூர், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சி.டி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது அந்த வளாகத்தில் அவர் தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை போலீசார் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
    • வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. அன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காய்ந்து போன மரங்கள் துளிர்விட தொடங்கின. பூமியில் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.

    வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி, உபரிநீராக ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிக பட்சமாக 102.7 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.

    இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

    இது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது என்றனர்.

    • டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது50). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு போதையில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், நாங்கள் கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்புங்கள் என்று கூறியுள்ளனர். டிரைவர் இந்த பஸ் கிருஷ்ணகிரிக்கு செல்லாது. தருமபுரி பஸ் நிலையத்திற்கு செல்கிறது என்றார்.

    நீங்கள் பஸ்நிலையத்தில் இருந்து வேறு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அரசு பஸ் டிரைவர் ராஜாவை தாக்கியது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சர்மா (24), பிடமனேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), பிடமனேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்.
    • தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தருமபுரி,

    கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய கோரி தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்க டேசன் தலைமை தாங்கி னார். கோட்ட தலைவர் சங்கீதா அனை வரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன், அரூர் கோட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில் மாநில செயலாளர் கல்பனா, துணை செயலாளர் பழனிய்ம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரூர் கோட்ட செயலாளர் சின்னராசு நன்றி கூறினார். 

    • சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

    இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

    • மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
    • பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதால் அடுத்த பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை.

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

    மேலும், "மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ×