என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி மாவட்டத்தில் மழை"

    • வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
    • வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. அன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காய்ந்து போன மரங்கள் துளிர்விட தொடங்கின. பூமியில் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.

    வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி, உபரிநீராக ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிக பட்சமாக 102.7 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.

    இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

    இது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது என்றனர்.

    • அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.
    • தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம் பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.

    மேலும் மழை விட்டு, விட்டு பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி- 2 மில்லி மீட்டர், பாலக்கோடு- 6 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி- 10 மில்லி மீட்டர், ஒகேனக்கல்- 2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி- 4 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 24 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×