என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நிலஅளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்.
- தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி,
கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய கோரி தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்க டேசன் தலைமை தாங்கி னார். கோட்ட தலைவர் சங்கீதா அனை வரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன், அரூர் கோட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில செயலாளர் கல்பனா, துணை செயலாளர் பழனிய்ம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரூர் கோட்ட செயலாளர் சின்னராசு நன்றி கூறினார்.
Next Story






