search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2 exam"

    • நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது.

    நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் 198 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளில் டாப் ஷீட்டுடன் விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடைந்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
    • மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

    • புஷ்பலதா பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.
    • கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2022-ம் ஆண்டு நடத்திய பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஹரி சபாபதி என்ற மாணவன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும் இவர் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஹர்ஷன் என்ற மாணவன் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல் பாடப்பிரிவில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ராஜ நிவிஷா 488 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 4 மாணவர்களும், வேதியியலில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் , முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர்.

    நெல்லை:

    பாளை மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவி மதுஸ்ரீ 595 மதிப்பெண்களும், ஜனனி 594 மதிப்பெண்களும், ஹரிஹர சுதன், பத்மா, சாரதா, வினோலின் ரத்னா ஆகிய 4 ேபரும் 591 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    கணிதத்தில் 13 பேரும், இயற்பியலில் 5 பேரும், வேதியியலில் 21 பேரும், உயிரியலில் 12 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், வணிகவியலில் 12 பேரும், வணிக கணிதத்தில் 10 பேரும், கணக்குப்பதிவியலில் 10 பேரும், பொருளியலில் 4 பேரும் 100-க்கு 100 பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர். அதில் மாணவி ஸ்ரீசாரதாதேவி 493 மதிப்பெண்களும், ராகவி துர்கா 492 மதிப்பெண்களும், ஜெயசிரஞ்சீவி, ரிதிவேதா ஆகிய 2 பேரும் 489 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 13 பேரும், அறிவியிலில் 4 பேரும், சமூக அறிவியலில் 1 நபரும் 100-க்கு 100 பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் வள்ளலார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    • செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை வள்ளலார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி கடந்த 8ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுசாதனை படைத்து வருகிறது.மாணவி மதுமிதா 589 மதிப்பெண்களும், மோனிகா 583 மதிப்பெண்களும், காயத்ரி 578 மதிப்பெண்களும், அய்யப்பன் 576 மதிப்பெண்களும், அருள்மணி 576 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 550க்கு மேல் 22 மாணவ-மாணவியர்களும் 500க்கு மேல் 68 மாணவ-மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஜனனி 485 மதிப்பெண்ணும், ஜனா 481 மதிப்பெண்ணும்,எழிலரசி 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து–ள்ளனர் 470 க்கு மேல் 12 மாணவர்களும், 450 க்கு மேல் 29 மாணவர்களும் 400க்கு மேல் 68 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனைமாணவ, மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர்நடராஜன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமால்வளவன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாளாளர் சக்கரவர்த்தி,பொருளாளர் ராஜா, வள்ளலார் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜேந்திரன், மற்றும் கண்ணன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், மணிவாசகம், சாரங்கபாணி, திருவேங்கடம், சரவணன், செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    • நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது.
    • இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

    நேற்று வெளியான தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டின் அருகிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

    சிறிது நேரத்தில் சுபாஷ் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் மாவட்ட த்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 189 உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 20,972 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவற்றில் மாணவர்கள் 10,263 பேர், மாணவிகள் 10,709 பேர் தேர்வு எழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 92.08 சதவீதம் தேர்ச்சி விகிதமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி களில் 90.23 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோட்டக்குப்பம், வீடூர் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • கோவை மாவட்டம் பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழக அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர். இதையடுத்து பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு மையங்களிலும் விடை த்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு, அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டது.

    இன்று காலை தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோவை மாவட்டம் 96.91 சதவீதம் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 95.58 சதவீதமும், மாணவிகள் 98.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 705 பேரும், மாணவிகள் 17, 990 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன்க ளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இருப்பினும் சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. #Plus2Results
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்களுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.37 சதவீதம் பெற்று முதல் இடம் பிடித்தது. ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 214 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 490 மாணவர்களும், 12 ஆயிரத்து 826 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினர்.

    இதில் 10 ஆயிரத்து 847 மாணவர்களும், 12 ஆயிரத்து 308 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.40, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.96 என மொத்தம் தேர்ச்சி சதவீதம் 95.23 ஆக உள்ளது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    இன்று வெளியான பிளஸ்-2 முடிவுகளை மாணவர்கள் தங்களது செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் பார்த்து தெரிந்து கொண்டனர். அதுமட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் செல்போனிலும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.

    மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்கள் பட்டியல் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது. இண்டர்நெட் மையங்களிலும் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.

    நாளை முதல் 26-ந் தேதி வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மாதிரி ரேங்க் கார்டு வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Plus2Results
    புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus2Result #Plus2Exam #TNResults
    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

    இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் 92.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 908 மாணவர்கள், 7 ஆயிரத்து 786 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 694 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    இத்தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 236, மாணவிகள் 7 ஆயிரத்து 421. தேர்வு எழுதிய மாணவர்களில் 92.94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.

    புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 677 மாணவர்கள், 3 ஆயிரத்து 754 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 431 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    இதில் 2 ஆயிரத்து 91 மாணவர்கள், 3 ஆயிரத்து 415 மாணவிகள் என 5 ஆயிரத்து 506 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.62 ஆகும்.


    புதுவை, காரைக்காலில் தனியார் பள்ளிகளில் 4 ஆயிரத்து 231 மாணவர்கள், 4 ஆயிரத்து 32 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 263 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 145 மாணவர்கள், 4 ஆயிரத்து 6 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 151 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.64 ஆகும். பிராந்தியம் வாரியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதுவையில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.71 சதவீதம் அதிகம்.

    காரைக்காலில் 88.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.13 சதவீதம் அதிகம்.

    பிராந்தியம் வாரியாக அரசு பள்ளிகளில் புதுவையில் 86.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 12.84 சதவீதம் அதிகம். காரைக்காலில் 84.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இது கடந்த ஆண்டைவிட 8.25 சதவீதம் அதிகம். புதுவை பகுதியில் 53 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. காரைக்காலில் 4 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults
    தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் (95.37%) முதலிடத்தை பிடித்துள்ளது.

    மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு:-

    திருப்பூர் :  95.37 சதவீதம்
    ஈரோடு :   95.23 சதவீதம்
    பெரம்பலூர்: 95.15 சதவீதம்
    கோவை :   95.1 சதவீதம்
    நாமக்கல்:   94.97 சதவீதம்
    கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்

    விருதுநகர்: 94.44 சதவீதம்
    நெல்லை: 94.41 சதவீதம்
    தூத்துக்குடி: 94.23 சதவீதம்
    கரூர்: 94.07 சதவீதம்
    சிவகங்கை: 93.81 சதவீதம்
    மதுரை: 93.64 சதவீதம்




    ஊட்டி: 90.87 சதவீதம்
    திண்டுக்கல்: 90.79 சதவீதம்
    சேலம்: 90.64 சதவீதம்
    புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
    காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
    அரியலூர்: 89.68 சதவீதம்

    தருமபுரி: 89.62 சதவீதம்
    திருவள்ளூர்: 89.49 சதவீதம்
    கடலூர்: 88.45 சதவீதம்
    திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
    நாகை :87.45 சதவீதம்
    கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்

    திருச்சி: 93.56 சதவீதம்
    சென்னை: 92.96 சதவீதம்
    தேனி:92.54 சதவீதம்
    ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
    புதுச்சேரி: 91.22 சதவீதம்
    தஞ்சாவூர்: 91.05 சதவீதம். #Plus2Result #Plus2Exam #TNResults 
    ×