பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி
Published on

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் மாவட்ட த்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 189 உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 20,972 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவற்றில் மாணவர்கள் 10,263 பேர், மாணவிகள் 10,709 பேர் தேர்வு எழுதினர்.

இன்று வெளியான தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 92.08 சதவீதம் தேர்ச்சி விகிதமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி களில் 90.23 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோட்டக்குப்பம், வீடூர் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com