search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள்- கோவை மாவட்டத்தில் 96.91 சதவீதம் பேர் தேர்ச்சி
    X

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள்- கோவை மாவட்டத்தில் 96.91 சதவீதம் பேர் தேர்ச்சி

    • கோவை மாவட்டம் பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழக அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர். இதையடுத்து பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு மையங்களிலும் விடை த்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு, அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டது.

    இன்று காலை தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோவை மாவட்டம் 96.91 சதவீதம் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 95.58 சதவீதமும், மாணவிகள் 98.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 705 பேரும், மாணவிகள் 17, 990 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன்க ளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இருப்பினும் சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×