search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marks Certificate"

    • வருகிற 31-ந் தேதி முதல் வழங்க உத்தரவு
    • அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்

    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.

    மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வகையில் உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் சான்றிதழ் வைத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்.

    இதைத் தொடர்ந்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வருகிற 31-ந் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • 2021-22-ம் கல்வி ஆண்டில் படித்தவர்கள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 10-வகுப்பு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் 24-ந் தேதி வழங்கப்பட்டு மேல் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டு பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் தேர்வு துறையினரால் பள்ளிகளுக்கு கடந்த 13-ந் தேதி வழங்கப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று வழங்கப்பட்டது.

    "

    • தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
    • மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

    ×