என் மலர்

  செய்திகள்

  பிளஸ்-2 தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி
  X

  பிளஸ்-2 தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 154 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 747 மாணவர்களும்,10 ஆயிரத்து 267 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து014 பேர் 64 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது உடன் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பொன்முடி உடனிருந்தார்.

  தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 804 மாணவர்களும், 9 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  இதில் கண் பார்வையற்றவர்கள் 5பேர் தேர்வு எழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாதவர்களில் 15 பேர் எழுதி 13 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். ஊனமுற்றவர்களில் 46 பேர் தேர்வு எழுதி 37 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கையால் எழுத முடியதாவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட 12 பேர் தேர்வு எழுதி 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  கடந்த ஆண்டு 92.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.56 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

  தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் 1180க்கும் மேல் மதிப் பெண்களும், 78 பேர் 1151க்கு மேல் மதிப்பெண்களும், 196 பேர் 1125-க்கும்மேல் மதிப்பெண்களும், 315 பேர் 1000-க்கும் மேல் மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
  Next Story
  ×