search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Diesel Price"

    மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், மத்திய அரசு தீபாவளியையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதேபோல் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அவென்யூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து எஸ்பிளனேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. 

    இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரணி புறப்பட்ட தயாரானபோது பாஜக அலுவலகம் முன்பு பேரிகார்டுகளை அமைத்து போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. மோதலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட்வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும்பங்கான வாட்வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

    இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ரூ.7-8 ரூபாயும் - டீசல் விலையை ரூ.9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

    இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் 7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் 12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் 2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

    ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

    இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச்சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

    மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச்சுமையை குறைக்க முன் வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இதுபோன்ற விலைக்குறைப்பு அறிவிப்புகள் மக்களுக்கு எவ்விதத்தில் பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை என்று மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
    கொல்கத்தா :

    மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதை வெறும் கண் துடைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே விண்ணை தொட்டுவிட்ட பெட்ரோல் விலை நிலவரத்தில் இதை மத்திய அரசின் தீபாவளி பரிசு என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரி நிர்ணயத்தில் அடிப்படையான விலைக்குறைப்பு செய்வதே சரியான விலைக்குறைப்பு ஆகும். இதுபோன்ற விலைக்குறைப்பு அறிவிப்புகள் மக்களுக்கு எவ்விதத்தில் பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

    இதற்கிடையே மேற்கு வங்காள அரசு பெட்ரோலுக்கு ரூ.5.82-ம், டீசலுக்கு ரூ.11.77-ம் குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
    மும்பை:

    பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய அரசு, திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த வரி குறைப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் வரியை குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 50 ரூபாய்க்கு குறைக்க வேண்டுமானால் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

    ‘5 ரூபாய் விலை குறைப்பு எதற்கும் உதவப் போவதில்லை. முதலில் குறைந்தபட்சம் 25 ரூபாய் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.  பின்னர் 50 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து, பெட்ரோல் விலையை 5 ரூபாயை குறைத்த மத்திய அரசு, 50 ரூபாய் குறைக்க வேண்டும் என்றால் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்’ என்றார் ராவத்.
    அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக ப.சிதம்பரம் கூறினார்.
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இது இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், கலால் வரி குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

    பல்வேறு மாநிலங்களல் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியையும், எரிபொருள் மீதான கலால் வரி குறைப்பையும் இணைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.

    ‘இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு துணை தயாரிப்பை உருவாக்கியுள்ளன... பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. குறிப்பாக, அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள் மீது அதிகாமன வரி விதிக்கப்படுகிறது’ என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ப.சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், ‘மோடி அரசு மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் உடன் இருக்கிறது’ என்றார்.
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து, பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் இருந்தது. 

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், அரசின் இந்த முடிவு,  சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
    மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மாநில அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் ஆகியவை அனைத்து பொதுமக்களுக்கும் மிகவும் தேவையான அத்தியாவசிய பொருளாகும். சர்வதேச விலைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று எண்ணெய் கம்பெனிகளுக்கு அதிகாரம் அளித்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.45-க்கும் விற்பனை செய்ய முடியும்.

    கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்து தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், விரைவில் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம் போல் இன்றும் குறைந்தது. தொடர்ந்து விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.10-க்கு விற்கப்பட்டது. இன்று 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.74.88-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.70.86-க்கு விற்கப்பட்டது. இன்று 37 பைசா குறைந்து ரூ.70.57-க்கு விற்கப்பட்டது.

    தொடர்ந்து பெட்ரோல் -டீசல் விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.74.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.77 காசுகளாகவும் விற்பனையாகிறது. #FuelPrice
    சென்னை:

    சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.74.91 காசுகளாவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.77 காசுகளாகவும் விற்கப்படுகிறது

    நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள், டீசல் விலை 35 காசுகள் குறைந்து விற்பனையாகியது.

    தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  #FuelPrice 
    பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தவறிவிட்டதாக குறிப்பிட்ட மத்திய மந்திரி விஜய் கோயல் இன்று மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். #VijayGoel #petroldieselprice
    புதுடெல்லி :

    பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசு ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 1 குறைத்ததை அடுத்து மாநில அரசுகளும் விலை குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சமீபத்தில் வலியுறுத்தினார்.

    அவரின் வலியுறுத்தலை ஏற்று மகாராஷ்டிரா, அரியானா, அசாம் உள்ளிட்ட பாஜகவின் ஆட்சி நடைபெறும் பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளன.

    இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தவறிவிட்டதாக மத்திய மந்திரி விஜய் கோயல் மாட்டு வண்டியில் சென்று போராட்டம் நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  இப்போது மத்திய அரசு விலையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது, அதே போன்று மக்களின் சுமையை குறைக்கும் வகையில் டெல்லி மாநில அரசு விலை குறைப்பு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த போராட்டத்தின் போது மாநில அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பாஜகவினர் கோஷம் எழுப்பினர். #VijayGoel #petroldieselprice
    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மோடி அரசு ஆடும் மோசடி நாடகம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ.1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும் மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.



    இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்து ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து ரூ1.50 குறைப்பதாக சொல்வது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.

    கர்நாடகா தேர்தலின் போது ஒரு மாதத்துக்கும் மேல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் ஒரேயடியாக பாஜக அரசு உயர்த்தியது. அந்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராமல் இருக்கும் போது மக்களிடம் அநியாய வரிவிதிப்பின் மூலம் மோடி அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.

    ஏழை-எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் வழிப்பறி செய்து கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய அதைப் பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் 3.16லட்சம் கோடி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice


    மத்திய அரசு கலால் வரி குறைப்பு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலைக் குறைப்பைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்துள்ளது. #PetrolDieselPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.



    ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் கலால் வரி குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டு 10500 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வரி குறைப்பு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையானது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.63 குறைந்தது. ஒரு லிட்டர் ரூ.84.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.79.79 -க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் இன்று ரூ.77.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.250 குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice
    ×