என் மலர்

  செய்திகள்

  பெட்ரோல்
  X
  பெட்ரோல்

  பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டம்- லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மாநில அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.
  நாமக்கல்:

  தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

  பெட்ரோல், டீசல் ஆகியவை அனைத்து பொதுமக்களுக்கும் மிகவும் தேவையான அத்தியாவசிய பொருளாகும். சர்வதேச விலைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று எண்ணெய் கம்பெனிகளுக்கு அதிகாரம் அளித்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.45-க்கும் விற்பனை செய்ய முடியும்.

  கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்து தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், விரைவில் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×