search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக பேரணி
    X
    பாஜக பேரணி

    மாநில அரசுக்கு எதிராக பேரணி- கொல்கத்தாவில் போலீசாருடன் பாஜகவினர் மோதல்

    மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், மத்திய அரசு தீபாவளியையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதேபோல் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அவென்யூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து எஸ்பிளனேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. 

    இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரணி புறப்பட்ட தயாரானபோது பாஜக அலுவலகம் முன்பு பேரிகார்டுகளை அமைத்து போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. மோதலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    Next Story
    ×