search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol bomb"

    • பாரிமுனையில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைதுசெய்தனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார்.

    விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

    தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்ற அமர்வு முன்பு வந்தது.

    இதில், கருக்கா வினோத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

    நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    • முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகர் பகுதியைசேர்ந்த சஞ்சய்குமார் (வயது23). பழ வியாபாரி. இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (21) மற்றும் வெங்கடேசன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் ஆகியோர் சாலையில் கிடந்த ஒரு மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் தூக்கி எறிந்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    cசென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவினரின் சதித்திட்டம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

    இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார்.

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    2017ம் ஆண்டில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    நேற்று ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்று மற்றொரு சம்பவம் உள்பட இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பில் இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு தெரிந்து இதுவரை யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது இல்லை.

    ஒரு முறை பாஜகவை சேர்ந்த கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார் திருவள்ளூரில் பரமானந்தம். இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் குமார் 2013ம் ஆண்டிலும் மற்றொரு சம்பவம் 2017ம் ஆண்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில், பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும், பாதுகாப்பு கிடைப்பதற்காகவும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் பல்வேறு மூன்று சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    அதனால், பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கமலாலயத்தில் இரு அணிகளாக செயல்படுவதாகவும், அவர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

    அதனால், ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. கட்சியின் கவனத்தை ஈர்க்கவே பெட்ரோல் வீச்சு சம்பவங்களை நடத்துகின்றனர்.

    ஆனால் ஒன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆளுநர் மாளிகை மீதான தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.
    • நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.

    ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

    அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார்.

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.
    • ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை.

    சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கு வினோத் (42) இன்று மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச முற்பட்டார்.

    அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை பிடித்துவிட்டனர்.

    குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேலும் சில பாட்டில்கள் அவரிடம் இருந்தன.

    ஏற்கனவே வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது இதேபோல் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசினார்.

    கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.

    ஆனால் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார்.

    ஆளுநர் மாளிகை வாயில் முன் வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை கூட அவர் தாண்டவில்லை. நடந்து வந்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

    ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பிலும் எந்த குறைபாடும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
    • ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் அவனியாபுரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    ஓட்டலில் தகராறு

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீரைத்துறை பகுதி யைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் ரத்தின குமார் (வயது 23) என்பவர் சாப்பிட வந்தார். சாப்பிட்ட பின்னர் அதற்கு பணம் தராமல் ஓட்டலில் வேலை பார்த்து வரும் ஊழியர்க ளுடன் தகராறில் ஈடுபட் டுள்ளார்.

    இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளர் ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தி னகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட ரத்தின குமார் ஜாமினில் வெளிய வந்தார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த, தன்மீது புகார் கொடுத்த வரை பழிவாங்க திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) இரவு ஓட்டல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஓட்டலில் இருந்த ஒரு சில பொருட்கள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக் டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமாரை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்த மற்றொரு நபருக்கு போலீ சார் வலைவீசி தேடி வரு கின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமார் மீது கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தூசி அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குண்டியாந் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மற்றும் உத்திரமே ரூரை அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பின் னர் அவர்கள் போதையில் நாங்களும் ரவுடிதான் என பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    இதனை அந்த பகுதியில் இருந்த ஏகாம்பரம் மகன் சபேஸ் தட்டிக்கேட்டார். ஆத் திரம் அடைந்த கார்த்திக், அர விந்தன் ஆகியோர் ஆபாச மாக பேசி கையில் வைத்தி ருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பொதுமக்கள் மீது வீசினார் கள்.

    இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு ஒதுங்கவே தீயில் இருந்து தப்பினர். உடனே கிராம மக்கள் 2 வாலி பர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சபேஸ் நேற்று தூசி போலீசில் புகார் செய் தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து கிராமத்தில் ரவுடி தனம் செய்து பெட்ரோல் குண்டு வீசிய கார்த்திக், அர விந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17, 19 வயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து அந்த காட்சிகளை பதிவாக்கி சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டனர். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

    இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரும் யூ-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும், தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இசக்கியப்பன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, தலைமறைவான 16 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்றது. அங்கு காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.
    • செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டுகளை சுவற்றில் வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது.

    மேலும் பின்னணியில் ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வள்ளியூர் கீழ தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (25), சரவணன் (19) என்பதும் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும், அவன் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.

    பின்னர் தாங்கள் தயாரித்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அப்போது தான் போலீசில் சிக்கி உள்ளனர்.

    அவர்களது செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×