search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்
    X

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

    • கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.
    • ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை.

    சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கு வினோத் (42) இன்று மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச முற்பட்டார்.

    அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை பிடித்துவிட்டனர்.

    குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேலும் சில பாட்டில்கள் அவரிடம் இருந்தன.

    ஏற்கனவே வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது இதேபோல் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசினார்.

    கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.

    ஆனால் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார்.

    ஆளுநர் மாளிகை வாயில் முன் வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை கூட அவர் தாண்டவில்லை. நடந்து வந்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

    ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பிலும் எந்த குறைபாடும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×