search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar dam"

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 5535 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்து 129.10 அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர்திறப்பு 1700 கனஅடியாக உள்ளது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்துசேருகிறது.

    மூலவைகையாற்று பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து 2415 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.87 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1390 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 73 கனஅடி, திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடி. 39 கனஅடிநீர் வரும் நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. பெரியாறு 32, தேக்கடி 31, கூடலூர் 13, சண்முகாநதிஅணை 9, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 15, வைகை அணை 3, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 17, கொடைக்கானல் 3.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. #PeriyarDam

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.

    56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது.

    நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.

    அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது

    பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. #PeriyarDam #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.

    கோப்புப்படம்

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.

    56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது. நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.

    அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #PeriyarDam #VaigaiDam
    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி, போடி, உத்தமபாளையம், கூடலூர், குமுளி, சிலமலை, சங்கராபுரம், துரைராஜபுரம் காலனி, குரங்கணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில தொடர்ந்து பெய்த மழையால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று வரை 951 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அது 3,161 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டமும் உயர்ந்து 126.05 அடியாக உள்ளது.


    வைகை அணையின் நீர் மட்டம் 55.94 அடியாக உள்ளது. 1,055 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், பழனி பகுதியில் கன மழை பெய்தது.

    கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து 43 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லை. அணையின் நீர் மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 121.03 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரியாறு 94.4, தேக்கடி 78, கூடலூர் 18.2, சண்முகாநதி அணை 13, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 30, வைகை அணை 3, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 21.6

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  #PeriyarDam
    நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    மேலும் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 126.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 594 கனஅடியாக உயர்ந்துள்ளது. வைகை அணை நீர்மட்டம் 58.89 அடியாக உள்ளது. அணைக்கு 1081 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1590 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17, தேக்கடி, 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #PeriyarDam

    கூடுதல் தண்ணீர் திறப்பால் பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை நின்றபிறகு பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்ட பெரியாறு அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால் 130 அடிக்கு கீழ் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்தது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4579 மி. கன அடியாக உள்ளது.

    இதேபோல் 70 அடிக்கு மேல் உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 63.78 அடியாக உள்ளது. நீர்வரத்து 1522 கன அடி. அணையில் இருந்து வினாடிக்கு 4710 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4364 மி.கன அடியாக உள்ளது.

    நீர்மட்டம் குறைந்து வருவதைப்போலவே நீர் இருப்பும் இரு அணைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. மஞ்சளாறு நீர் மட்டம் 41.55 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 115.12 அடி.

    பெரியாறு 5, சண்முகாநதி அணை 3, வீரபாண்டி 13, வைகை அணை 12.4, மஞ்சளாறு 23, சோத்துப்பாறை 10, உத்தமபாளையம் 0.6. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான தேக்கடியில் கேரள வனத்துறையினர் கார் பார்க்கிங் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.
    கூடலூர்:

    தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள வனத்துறை சார்பில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இந்த இடம் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ளது. தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமாகும்.

    எனவே இங்கு கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் கேரள வனத்துறையினர் அமைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகை அகற்றப்பட்டது.

    கடந்த நவம்பர் 15-ந் தேதி கேரள வனத்துறையினரால் அமைக்கப்பட்ட கார் பார்க்கிங் செயல்படுத்த தடையில்லை. அந்த இடத்தில் தரையை மட்டுமே பயன்படுத்தலாம். கட்டிடங்களோ கட்டுமான பணிகளோ செய்யக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. அன்று முதல் தேக்கடி கார் பார்க்கிங் நடைமுறையில் இருந்து வருகிறது.

    கேரளாவில் தற்போது மழை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தேக்கடிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் தேக்கடியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணியை கேரள வனத்துறை தொடங்கியுள்ளது.

    பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி நடக்கும் இந்த பணிகளை உடனடியாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்து வந்த நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய 142 அடியையும் குறைத்து தற்போது 139.99 அடி மட்டுமே தேக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதால் கேரள அரசு மீண்டும் தனது அடாவடியை தொடங்கியுள்ளது.

    எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

    அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.

    இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. #Periyardam
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியான தேக்கடியில் முல்லைபெரியாறு அணை உள்ளது. 155 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்ததால் இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே இந்த ஆண்டு 142 அடி நீர்மட்டத்தை தொட்டது. அதோடு உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்துவிடப்பட்டதால் கேரளப்பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது.

    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. அது தற்போது 2974 கனஅடி நீர்வருகிறது. அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உள்ளது. 2206 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது 1600 கனஅடிநீர் மின்உற்பத்தி நிலையம் மூலமும், 606 கனஅடிநீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வரக்கூடிய 2190 கனஅடிநீர் அப்படியே பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. பெரியாறு அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும், தேக்கடியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  #Periyardam



    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக குறைந்தது.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரள முதல்வர் வலியுறுத்தினார்.

    ஆனால் தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வி‌ஷயத்தில் தமிழக உரிமைய விட்டு கொடுக்க முடியாது. எனவே 142 அடி வரை நீர் தேக்கப்படும் என தெரிவித்தார். இருந்தபோதும் 141 அடி வரையே நீர் தேக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். பேபி அணையை வலுப்படுத்தி பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தற்போது மழை ஓய்ந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3890 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 140 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 10 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.91 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.

    பெரியாறு 2.4, தேக்கடி 2, கூடலூர் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடி உயர்த்தும் வரை போராடுவோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். #Keralasouthwestmonsoon #Periyardam

    கம்பம்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க விடமாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

    இது குறித்து அங்குள்ள விவசாயிகள் கூறுகையில், கூடலூர் பாண்டியன்:- முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மூவர் மற்றும் ஐவர் குழுவினர் அணை பலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைப்பதால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும். தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்யும் ஆவணங்களை பென்னி குவிக் பேத்தி டயானா ஜிப் மாவட்ட கலெக்டரிடம் அளித்துச் சென்றுள்ளார். தற்போது நீர் மட்டத்தை குறைக்க தொடரப்பட்டுள்ள வழக்கு விளம்பரத்துக்காகவே என்று தோன்றுகிறது.


    பொன் காட்சி கண்ணன்:- தமிழகம் மற்றும் கேரள மக்களிடையே தற்போது நல்லுறவு பேணிக் காக்கப்பட்டு வருகிறது. இதை சீர் குலைக்கும் வகையில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    ஆனால் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அணையின் நீர் மட்டம் 152 அடி உயரும் வரை போராடுவோம்.

    ராஜா:- முல்லைப் பெரியாறு அணையில் 1924-ம் ஆண்டே 152 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு அதிக பட்சமாக 3 ஆயிரம் கன அடி நீரே திறக்க முடியும். எனவே தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயி நிலங்கள் பயன்பெறும்.


    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து ரிசார்டுகள் மற்றும் ஓட்டல்கள் கட்டியுள்ளனர். தற்போது அவற்றுக்கு பாதிப்பு என்பதாலேயே நீர் மட்டத்தை குறைக்க அழுத்தம் தரப்படுகிறது. எனவே தமிழக அரசு நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. 152 அடி வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயபால்:- கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை விவசாய நிலத்துக்கு பயன்படுத்த பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குவிக் பெரியாறு அணையை கட்டினார். ஆனால் கேரள அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக பொதுமக்களை திசை திருப்புகின்றனர்.

    இதனாலேயே அணை பலம் இழந்து விட்டது போன்று வதந்தி பரப்பி வருகின்றனர். ஐவர் மற்றும் மூவர் குழுவினர் அணையின் பலத்தை உறுதிபடுத்தயுள்ளனர். எனவே பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கினால் தமிழக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். நீர்மட்டத்தை குறைத்தால் போராட்டம் நடத்தப்படும்.

    முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என பென்னிகுவிக் பேத்தி டயானா ஜிப் கூறினார். #MullaperiyarDam #Pennycuick
    தேனி:

    இங்கிலாந்து லண்டன் நகரில் குழந்தைகள் மற்றும் நரம்பியல் டாக்டராக உள்ளார் டயானா ஜிப். இவர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அண்ணன் வழி பேத்தி ஆவார்.

    கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம் கொச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

    தேனி வந்த டயானா ஜிப் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேரள பகுதியில் வெள்ள சேதம் அதிகரித்துள்ளது. என் தாத்தா ஜான் பென்னி குவிக் எழுதிய புத்தகத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் பெரியாறு அணை குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் கூடுதலாக தண்ணீர் எவ்வாறு எடுக்கலாம் என்ற விபரமும் உள்ளது.

    அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை சேமிக்கும் அளவுக்கு பலமாக உள்ளதற்கான சான்று மற்றும் வரை படங்கள் உள்ளன. மேலும் அணையில் இருந்து தற்போது சுரங்க குழாய்கள் முலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.



    இதே போல் ஒரு ராட்சத சுரங்க குழாய் பதிக்க பென்னி குவிக் வரை படம் வைத்திருந்தார். அதன்படி புதியதாக ஒரு சுரங்கப்பாதை அமைத்து அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது கேரள மாநிலம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்களுக்கு உதவி செய்வது கடமையாகும். தமிழகம் மற்றும் கேரள அரசுகள் நீரை பங்கிடுவதிலும் வெள்ள நிவாரண பணிகள் வழங்குவதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MullaperiyarDam #Pennycuick


    ×