என் மலர்

  நீங்கள் தேடியது "Vaigam Dam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
  கூடலூர்:

  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.

  இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.

  71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது.

  அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.

  56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது.

  நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.

  அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது

  பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  ×