என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னிகுவிக் பேத்தியை விவசாய சங்க பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.
    X
    பென்னிகுவிக் பேத்தியை விவசாய சங்க பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.

    பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் - பென்னிகுவிக் பேத்தி பேட்டி

    முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என பென்னிகுவிக் பேத்தி டயானா ஜிப் கூறினார். #MullaperiyarDam #Pennycuick
    தேனி:

    இங்கிலாந்து லண்டன் நகரில் குழந்தைகள் மற்றும் நரம்பியல் டாக்டராக உள்ளார் டயானா ஜிப். இவர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அண்ணன் வழி பேத்தி ஆவார்.

    கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம் கொச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

    தேனி வந்த டயானா ஜிப் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேரள பகுதியில் வெள்ள சேதம் அதிகரித்துள்ளது. என் தாத்தா ஜான் பென்னி குவிக் எழுதிய புத்தகத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் பெரியாறு அணை குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் கூடுதலாக தண்ணீர் எவ்வாறு எடுக்கலாம் என்ற விபரமும் உள்ளது.

    அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை சேமிக்கும் அளவுக்கு பலமாக உள்ளதற்கான சான்று மற்றும் வரை படங்கள் உள்ளன. மேலும் அணையில் இருந்து தற்போது சுரங்க குழாய்கள் முலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.



    இதே போல் ஒரு ராட்சத சுரங்க குழாய் பதிக்க பென்னி குவிக் வரை படம் வைத்திருந்தார். அதன்படி புதியதாக ஒரு சுரங்கப்பாதை அமைத்து அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது கேரள மாநிலம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்களுக்கு உதவி செய்வது கடமையாகும். தமிழகம் மற்றும் கேரள அரசுகள் நீரை பங்கிடுவதிலும் வெள்ள நிவாரண பணிகள் வழங்குவதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MullaperiyarDam #Pennycuick


    Next Story
    ×