என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாறு அணை"

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2333 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    உப்பார்பட்டி பகுதியில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 137 அடியை எட்டியது. அணையில் 6370 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அக்டோபர் மாதத்தில் 138 அடிவரைதான் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் கேரள பகுதிக்கு வீணாக உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 61.19 அடியாக உள்ளது. அணைக்கு 100 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2099 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3834 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி அருகே வருசநாடு வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது படிக்கட்டுகள், தடுப்புகள் சேதமடைந்தது. மேலும் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் இன்று காலை கூடுதல் தண்ணீர் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் மழை காலங்களில் நீர்நிலைகளுக்கு செல்வததை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிபட்டி 2.8, அரண்மனைபுதூர் 2.2, வீரபாண்டி 3.2, பெரியகுளம் 9.6, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10.6, வைகை அணை 2, போடி 5.8, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 6.8, பெரியாறு அணை 17, தேக்கடி 26, சண்முகாநதி 7.4 என மொத்தம் 110.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நாளை மறுதினம் (11-ந்தேதி) துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்த வருகை தருகின்றனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

    கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர் வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 478 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1020 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5597 மி.கன அடியாக உள்ளது.

    துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில் இதுவரை மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வுகளால் பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் ஆண்டு தோறும் தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய எந்தவித பராமரிப்பு பணியையும் செய்வதற்கு கேரள அரசு சம்மதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.

    எனவே இந்த குழுவின் ஆய்வுகள் என்பது வெறும் சம்பிரதாயம் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் அளித்த பல்வேறு வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் கேரள அரசு பின்பற்றுவது இல்லை. தமிழகத்தின் சார்பில் படகு விடுவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே எவ்வித அதிகாரமும் இல்லாத இந்த குழுக்களாலும், ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முனைப்பும் காட்டாத மத்திய நீர்வளத்துறையின் செயல்பாடுகளும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

    இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து வெளியேறினர். எனவே முல்லைப்பெரியாறு அணையில் பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமையை இந்த குழுக்கள் தங்களின் ஆய்வுகள் மூலமும், அதன் அறிக்கைகள் மூலமும் பெற்றுத் தருமேயானால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது.
    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறைப்படி 136 அடிக்கு மேல் ஜூலை மாதத்தில் தேக்கமுடியாது என்பதால் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைபெய்ய தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 1311 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5942 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு 638 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5690 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்பாகவே தொடங்கி பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் ரூல் கர்வ் முறைப்படி அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த 1 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 2131 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4001 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை மேலும் நீர்வரத்து உயர்ந்து 4574 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று நீர்மட்டம் 130.90 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 131.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31 வரை அணயில் 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் முழு அளவில் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 1837 கன அடி. நீர் திறப்பு 869 கன அடி. இருப்பு 4738 மி.கன அடியாக உள்ளது. 66 கன அடியை எட்டியதும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் அணையின் நீர்மட்டத்தை நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
    • பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும்.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது.
    • பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய் மூலம் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் அணையின் நீர்மட்டம் 114 அடியாக சரிந்ததால் குடிநீருக்காக மட்டும் 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் நீர் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது. வழக்கம் போல் ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 1844 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அணைக்கு 1713 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது. 5259 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.95 அடியாக உள்ளது. 1484 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 4191 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 23-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த 6 நாட்களில் மட்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்காக ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 1350 கன அடி திறக்கப்பட்டு பின்னர் 900 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 460 கன அடி திறக்கப்பட்டு இன்று காலையில் மீண்டும் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 4665 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக நாளை முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடி ஆறு, வருஷநாடு, வைகை ஆறுகள் உள்ள பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். தற்போது பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 54.36 அடியாக உள்ளது. வரத்து 949 கன அடி. திறப்பு 72 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2617 மி.கன அடி.

    இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களின் பாசனத்திற்கு ஜூன் முதல் வாரத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு அணை 27.8, தேக்கடி 13.6, போடி 4.4, மஞ்சளாறு, அரண்மனைபுதூர் தலா 4, வீரபாண்டி 3.2, கூடலூர் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 124.75 அடியாக உள்ளது.

    அணைக்கு நேற்று காலை 7735 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7319 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்தபோதும் தமிழக பகுதிக்கு 100 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3569 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1-ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்போதுதான் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதோடு 2-ம் போகத்திற்கான கால அளவு சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது. வரத்து 623 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2487 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 182.70 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.48 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    பெரியாறு அணை 112.4, தேக்கடி 51.2, கூடலூர் 13.4, உத்தமபாளையம் 12.4, பெரியகுளம் 1, சண்முகாநதி அணை 5.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டியுள்ள இடுக்கி மாவட்டத்திலும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 23ந் தேதி அணையின் நீர்மட்டம் 114 அடியாகவும், நீர் இருப்பு 1634 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் நீர் வரத்து 100 கன அடியாக இருந்தது. அதன்பிறகு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 7145 கன அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 114 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 121.60 அடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதோடு ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7735 கன அடியாக உள்ள நிலையில் தமிழக பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் உயர்ந்து 2945 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.22 அடியாக உள்ளது. நீர் வரத்து 507 கன அடி. தண்ணீர் திறப்பு 72 கன அடி. நீர் இருப்பு 2443 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 181 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.97 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி. இருப்பு 57 மி. கன அடி.

    பெரியாறு 73, தேக்கடி 32, சண்முகாநதி அணை 5.8, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 4.6, போடி 2.2, சோத்துப்பாறை 1 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
    • பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
    • பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரி கேரள அரசு தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. கேரளா நடவடிக்கைக்கு எதிராக தமிழகமும் மனு தாக்கல் செய்தது. கார் பார்க்கிங் விவகாரத்தில் கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு வழக்கை நவம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழு தலைமையில் நில ஆய்வை மேற்கொள்ள கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×