என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
    X

    பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

    • இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டியுள்ள இடுக்கி மாவட்டத்திலும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 23ந் தேதி அணையின் நீர்மட்டம் 114 அடியாகவும், நீர் இருப்பு 1634 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் நீர் வரத்து 100 கன அடியாக இருந்தது. அதன்பிறகு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 7145 கன அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 114 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 121.60 அடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதோடு ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7735 கன அடியாக உள்ள நிலையில் தமிழக பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் உயர்ந்து 2945 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.22 அடியாக உள்ளது. நீர் வரத்து 507 கன அடி. தண்ணீர் திறப்பு 72 கன அடி. நீர் இருப்பு 2443 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 181 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.97 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி. இருப்பு 57 மி. கன அடி.

    பெரியாறு 73, தேக்கடி 32, சண்முகாநதி அணை 5.8, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 4.6, போடி 2.2, சோத்துப்பாறை 1 மி.மீ. மழை அளவு பதிவானது.

    Next Story
    ×