search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.
    X
    வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.

    விடிய விடிய மழை- பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி, போடி, உத்தமபாளையம், கூடலூர், குமுளி, சிலமலை, சங்கராபுரம், துரைராஜபுரம் காலனி, குரங்கணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில தொடர்ந்து பெய்த மழையால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று வரை 951 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அது 3,161 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டமும் உயர்ந்து 126.05 அடியாக உள்ளது.


    வைகை அணையின் நீர் மட்டம் 55.94 அடியாக உள்ளது. 1,055 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், பழனி பகுதியில் கன மழை பெய்தது.

    கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து 43 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லை. அணையின் நீர் மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 121.03 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரியாறு 94.4, தேக்கடி 78, கூடலூர் 18.2, சண்முகாநதி அணை 13, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 30, வைகை அணை 3, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 21.6

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  #PeriyarDam
    Next Story
    ×