search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar dam"

    கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக குறைந்துள்ளது. #MullaperiyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.

    தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

    கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.

    900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த மழை பல இடங்களில் ஏமாற்றி சென்றது. புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரியை விட குறைவாகவே பதிவானது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 125.05 அடியாக உள்ளது. அணைக்கு 186 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3,629 மில்லியன் கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 56.23 அடி. வரத்து 659 கன அடி. திறப்பு 60 கன அடி. இருப்பு 2,921 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 50 அடி. வரத்து 9 கன அடி திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 119.85 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 27 கன அடி.

    பெரியாறு 7, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.65 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. 142 அடிவரை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது.

    அதன்பின்னர் சாரல்மழை மட்டுமே பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு 187 கனஅடிநீர் வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 900கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 127.65 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. 859 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனம் மறறும் மதுரை மாநகர குடிநீருக்காக 1760 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வரும் நிலையில் 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 130.75 அடியை எட்டியுள்ளது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது.

    இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதலே மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் தண்ணீர் தேவையில்லை. ஒரு சிலர் மட்டும் அடுத்த போக சாகுபடிக்காக நாற்றாங்கால் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,360 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 58.76 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.65 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.25 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    நீர்பிடிப்பில் தொடரும் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை நெருங்கி வருகிறது. #MullaperiyarDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    130.30 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 130.90 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1209 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4908 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 60.20 அடி. வரத்து 1310 கன அடி. திறப்பு 3110 கன அடி. இருப்பு 3640 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 117 கன அடி. திறப்பு 110 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.27 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி. #MullaperiyarDam

    மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது. #Periyardam
    கூடலூர்:

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129 அடியாக குறைந்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்தது. அதன் பின்னர் மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது.

    அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1478 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. 16 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.13 அடியாக உள்ளது. 23 கனஅடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வருகிற 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். #Periyardam

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடி வரை எட்டியது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறி இன்னும் தென்படாததால் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.65 அடியாக உள்ளது. அணைக்கு 767 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு வந்த 2220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5571 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.35 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 90 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.25 அடி. அணைக்கு வரும் 30 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  #MullaPeriyar #PeriyarDam

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடர்ந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது.
    கூடலூர்:

    கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2629 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 193 கன அடியாக உயர்ந்துள்ளது. 57 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 53.75 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு 168 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 20.4, தேக்கடி 24.6, கூடலூர் 13.4, சண்முகாநதி அணை 21, உத்தமபாளையம் 17.4, வீரபாண்டி 50, மஞ்சளாறு 105, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் புயல் காரணமாக கன மழை பெய்தது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்துள்ளதால் அதன் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 133.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5504 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4666 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 50.80 அடி. வரத்து 64 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.8, கூடலூர் 2.6, வைகை அணை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடிப்பதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3025 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து 132.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1850 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. மூலவைகையாற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து 3159 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது.

    கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாக உள்ளது. நீர்திறப்பு இல்லை. அணையின் நீர்மட்டம் 47.30 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 10.9, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 2, மஞ்சளாறு 47, சோத்துப்பாறை 10, வைகை அணை 11 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    கோப்புப்படம்

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து தற்போது 59.58 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, தேக்கடி 7, வைகை அணை 3.6, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை முதலே தேனி மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MullaPeriyar #PeriyarDam
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam #MullaPeriyar
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகிற 7-ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 7388 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 127.20 அடியாக இருந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


    இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட மூலவைகையாற்று நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து 3168 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.30 அடியாக உள்ளது. 55 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 30.2, தேக்கடி 28.6, கூடலூர் 16, சண்முகாநதி அணை 8, உத்தமபாளையம் 9.6, மஞ்சளாறு 3, கொடைக்கானல் 9 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #PeriyarDam #MullaPeriyar
    ×