search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water low"

    கூடுதல் தண்ணீர் திறப்பால் பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை நின்றபிறகு பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்ட பெரியாறு அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால் 130 அடிக்கு கீழ் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்தது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4579 மி. கன அடியாக உள்ளது.

    இதேபோல் 70 அடிக்கு மேல் உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 63.78 அடியாக உள்ளது. நீர்வரத்து 1522 கன அடி. அணையில் இருந்து வினாடிக்கு 4710 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4364 மி.கன அடியாக உள்ளது.

    நீர்மட்டம் குறைந்து வருவதைப்போலவே நீர் இருப்பும் இரு அணைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. மஞ்சளாறு நீர் மட்டம் 41.55 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 115.12 அடி.

    பெரியாறு 5, சண்முகாநதி அணை 3, வீரபாண்டி 13, வைகை அணை 12.4, மஞ்சளாறு 23, சோத்துப்பாறை 10, உத்தமபாளையம் 0.6. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×