search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man death"

    சுவாமிமலை அருகே உள்ள கோணக்கரை அரசலாற்று கரையில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள கோணக்கரை அரசலாற்று கரையில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

    இதுபற்றி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் வடிவேலனிடம் புகார் செய்தனர். அவர் இதுபற்றி சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் சுவாமி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் உடல்நலம் பாதிப்படைந்த முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அருணாசலம் கீழ்காங்கேயன்குப்பம் தகன மேடை அருகே மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி இறந்தார்.

    இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கீரனூர் அருகே காட்டுக்குள் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகேயுள்ள உச்சாணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான உசிலமரக்காடு உள்ளது. இந்த காட்டில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. 

    அவரது புகாரின் பேரில் உடையானிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த், கீரனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் ஆகியோர் சம்பவம் நடந்த காட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். 

    அங்கு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தான் அணிந்திருந்த ஊதா நிற வேட்டியால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாசரேத் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
    நாசரேத்:

    நாசரேத் பஸ் நிலையம் அருகே நேற்று காலை அனாதையாக 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். உடனே நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

    அனாதையாக கிடந்து இறந்துபோன அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம் கடற்கரையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடற்கரையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் கிராமநிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியை சேர்ந்த கணேசன்(வயது 73) என்றும், அவர் கோட்டைப்பட்டினம் தர்காவிற்கு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கடலில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா? அல்லது வேறெதுவும் காரணமாக என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முதியவர் ஒருவர் கடற்கரையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாசரேத்:

    சாத்தான்குளம் அருகே உள்ள குறுகால்பேரியை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 87). இவருக்கு 4 மகன்கள் மற்றும்3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில் பால்ராஜ் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு நாசரேத்திற்கு வந்து பொருட்கள் வாங்கிவிட்டு பின்னர் மீண்டும் சாத்தான்குளம் சென்று கொண்டிருந்தார். அவர் வாலசுப்பிரமணியபுரம்- சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள தடுப்பில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விரைந்து வந்து பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முசிறி அருகே மொபட்டில் சென்ற முதியவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.
    முசிறி:

    முசிறி அடுத்த ஏவூர் அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (60) தொழிலாளி. இவர் கடந்த 1-ம் தேதி தனது மொபட் வண்டியில் முசிறிக்கு வந்தவர் வேலைகள் முடித்து கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். 

    அப்போது முசிறி அருகே பெரமூர் அய்யனார்கோவில் அருகில் மொபட் வண்டியில் சென்று கொண்டிருந்த துரைராஜ் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். 

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  துரைராஜ் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×